வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரூம் பரோட்டா

Photo of Mushroom parotta by sudha rani at BetterButter
354
0
0.0(0)
0

மஷ்ரூம் பரோட்டா

Jan-15-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரூம் பரோட்டா செய்முறை பற்றி

வித விதமான ஸ்டப்பிங் மற்றும் செய்து வைத்து கொண்டு விருந்தில் பல வகையான பரோட்டா செய்து வந்த விருந்தினரை அசத்தலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. நெய் 2 ஸ்பூன்
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. பூரணம்:
  6. காளான் 200 கிராம்
  7. வெங்காயம் 2
  8. தக்காளி 1
  9. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  11. கறிமசால் தூள் 1 ஸ்பூன்
  12. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  14. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. எண்ணெய் 4 ஸ்பூன்
  17. கடுகு 1 ஸ்பூன்
  18. கறிவேப்பிலை சிறிது
  19. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து நெய் விட்டு பிசிறி பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து எண்ணெய் ஊற்றி ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பூரணம்;
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பின் தூள் வகைகள் மற்றும் சுத்தம் செய்து நறுக்கி அலசிய காளான் சேர்த்து வதக்கவும்
  5. பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு சுருண்டு வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  6. பரோட்டா:
  7. மாவை உருண்டை பிடித்து சப்பாத்தி போல் திரட்டி நடுவில் காளான் மசாலா வைத்து மடித்து
  8. பின் மீண்டும் லேசாக திரட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்