வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு மற்றும் ஜாம் ஹனி கேக்

Photo of Orange and jam honey cake by sudha rani at BetterButter
512
0
0.0(0)
0

ஆரஞ்சு மற்றும் ஜாம் ஹனி கேக்

Jan-15-2019
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு மற்றும் ஜாம் ஹனி கேக் செய்முறை பற்றி

கேக் இல்லாம பார்ட்டியா வாய்ப்பே இல்லை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேக்:
  2. மைதா 125 கிராம்
  3. பட்டர் 125 கிராம்
  4. பொடித்த சர்க்கரை 125 கிராம்
  5. முட்டை 3
  6. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன்
  8. ஆரஞ்சு பீல் 25 கிராம்
  9. ஆரஞ்சு எசென்ஸ் 1 ஸ்பூன்
  10. ஆரஞ்சு கலர் சிறிது
  11. ஆரஞ்சு தோல் 1/2 ஸ்பூன்
  12. ஆரஞ்சு சாறு 1/2 கப்
  13. சூடான பால் 1 கப்
  14. சர்க்கரை சிரப்:
  15. சர்க்கரை 1/4 கப்
  16. தண்ணீர் சர்க்கரை மூழ்கும் அளவு
  17. தேன் 1/4 கப்
  18. அலங்கரிக்க:
  19. ப்ரூட் ஜாம்

வழிமுறைகள்

  1. மைதா பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஜலிக்கவும்
  2. ஜலித்த மாவுடன் ஆரஞ்சு பீலை கலந்து கொள்ளவும்
  3. அகலமான பாத்திரத்தில் முட்டையை நன்கு நுரைக்க அடிக்கவும்
  4. தனியாக பொடித்த சர்க்கரை மற்றும் பட்டரை பீட் செய்யவும்
  5. பின் பட்டர் கலவையுடன் முட்டை கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
  6. பின் ஆரஞ்சு சாறு மற்றும் ஆரஞ்சு தோலை சேர்த்து கலந்து கொள்ளவும்
  7. பின் ஜலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  8. இப்போது சூடான பாலை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்
  9. பின் பீரிஹீட் செய்த அவனில் வைத்து 30 _40 நிமிசம் பேக் செய்யவும்
  10. சர்க்கரை சிரப்:
  11. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்
  12. சர்க்கரை கரைந்தால் மற்றும் போதும்
  13. இறக்கிய பின் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  14. கேக் பேக் ஆனதும் ஆறவிட்டு துண்டுகள் போடவும்
  15. பின் சர்க்கரை சிரப்பில் முக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி மேலே ஜாம் தடவி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்