வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு கேசரி

Photo of Orange Kesari by sudha rani at BetterButter
352
0
0.0(0)
0

ஆரஞ்சு கேசரி

Jan-15-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு கேசரி செய்முறை பற்றி

இது கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 1 கப்
  2. சர்க்கரை 1.5 கப்
  3. ஆரஞ்சு மார்மலேட் 4 ஸ்பூன்
  4. தண்ணீர் 1 கப்
  5. ஆரஞ்சு ஜீஸ் 2 கப்
  6. முந்திரி சிறிது
  7. திராட்சை சிறிது
  8. ஏலக்காய்த்தூள் 1/4 ஸ்பூன்
  9. நெய் 1 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் கால் பங்கு நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
  2. பின் மீண்டும் அதே நெய்யில் ரவையை நன்கு வறுத்து எடுக்கவும்
  3. பின் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் தண்ணீர் ஆரஞ்சு சாறு மற்றும் ஆரஞ்சு மார்மலேட் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  4. கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த ரவையை சேர்த்து நன்கு கிளறவும்
  5. பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  6. பின் மீதி உள்ள நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக ஊற்றி தொடர்ந்து கிளறவும்
  7. நன்கு தளதளவென்று வரும் போது வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்
  8. பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சு சாறை பயன்படுத்தவும்
  9. இல்லை என்றால் பழச்சாற்றில் உள்ள கசப்பு சுவை வந்து விடும்
  10. ஆரஞ்சு மார்மலேட் சேர்ப்பதால் கலர் எசென்ஸ் தனியாக தேவை இல்லை
  11. பின் ஒரு கிண்ணத்தில் அடியில் நெய் தடவி இந்த கேசரி போட்டு அழுத்தி விட்டு தலைகுப்புற கவிழ்த்து வைத்து துண்டுகள் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்