வீடு / சமையல் குறிப்பு / கஸ்டர்ட் புட்டிங்

Photo of Custard pudding by sudha rani at BetterButter
737
0
0.0(0)
0

கஸ்டர்ட் புட்டிங்

Jan-15-2019
sudha rani
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கஸ்டர்ட் புட்டிங் செய்முறை பற்றி

பார்ட்டில செய்து அசத்த கலர் புல்லான ஒரு அருமையான புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கஸ்டர்ட் செய்ய:
  2. முட்டை 4
  3. சர்க்கரை 2 கப்
  4. ப்ரஷ் க்ரீம் 200 கிராம்
  5. ஜெலட்டின் 1 ஸ்பூன்
  6. பாதாம் எசென்ஸ் 1 ஸ்பூன் (கலருடன் சேர்த்து இருப்பது)
  7. ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் 1 ஸ்பூன் (கலரோடு சேர்ந்து இருப்பது)
  8. ஆரஞ்சு ஜெல்லி செய்ய:
  9. ஜெலட்டின் 2 பாக்கெட்
  10. சர்க்கரை 400 கிராம்
  11. ஆரஞ்சு பழ சாறு 1.5 கப்
  12. லெமன் சாறு 2 டேபிள்ஸ்பூன்
  13. தேன் 1 ஸ்பூன்
  14. உப்பு சிறிது
  15. துருவிய ஆரஞ்சு தோல் 1 ஸ்பூன்
  16. கேக்:
  17. மில்க்மெயின்ட் 200 மில்லி
  18. பவுடர் சுகர் 4 டேபிள்ஸ்பூன்
  19. எண்ணெய் 1/2 கப்
  20. வெனிலா எசென்ஸ் 1 ஸ்பூன்
  21. மைதா 1 கப்
  22. கார்ன்ப்ளார் 1/4 கப்
  23. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
  24. பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன்
  25. பால் 1/4 கப்
  26. அலங்கரிக்க:
  27. ரசகுல்லா 300 கிராம் (விருப்பட்டால்)

வழிமுறைகள்

  1. கேக்:
  2. மைதா கார்ன்ப்ளார் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஜலிக்கவும்
  3. மில்க்மெயின்ட் உடன் பொடித்த சர்க்கரை சேர்த்து பீட் செய்யவும்
  4. பின் ஆயில் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
  5. பின் வெனிலா எசென்ஸ் கலந்து பீட் செய்யவும்
  6. பின் ஜலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்
  7. பின் தேவையான அளவு பால் சேர்த்து கலந்து கொள்ளவும்
  8. பின் ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
  9. கஸ்டர்ட்:
  10. முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தனியாக பிரித்து எடுத்து நன்கு பீட் செய்யவும்
  11. பின் அதை கொதிக்கும் நீரில் ( டபுள் பாயில் முறையில்) வைத்து தொடர்ந்து கிளறவும்
  12. சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  13. மஞ்சள் முட்டை வெந்தா திக்காகி கரண்டியின் பின் பகுதியில் ஒட்டும் அதுவே பதம்
  14. இறக்கி ஆறவிடவும்
  15. பின் ப்ரஷ் க்ரீம் ஐ பீட் செய்து இதனுடன் மெதுவாக கலந்து கொள்ளவும்
  16. ஜெலட்டினை கொதிக்கும் நீரில் ஒரு 10 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  17. பின் டபுள் பாயில் முறையில் ஜெலட்டின் கரையும் வரை கிளறி இறக்கவும்
  18. பின் முட்டை கலவையை இரண்டாக பிரித்து பாதாம் எசென்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் கலந்து கொள்ளவும்
  19. பின் ஜெலட்டினை பாதி பாதியாக ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
  20. பின் ஒரு அரை மணி நேரம் வரை செட்டாக குளிர விடவும்
  21. ஜெல்லி:
  22. ஜெலட்டினை 1/2 கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  23. பின் டபுள் பாயில் முறையில் ஜெலட்டின் கரையும் வரை கிளறி விடவும்
  24. பின் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்
  25. பின் ஆரஞ்சு சாறு லெமன் சாறு தேன் சேர்த்து கலந்து விடவும்
  26. பின் வேறு பாத்திரத்தில் மாற்றி இரவு முழுவதும் செட் செய்யவும்
  27. இப்போது புட்டிங் தேவையான அனைத்தும் ரெடி
  28. ஒரு கண்ணாடி பவ்லில் முதலில் நறுக்கிய கேக் துண்டுகளை அடுக்கி அதன் மேல் சுகர் சிரப்பை பரவலாக ஊற்றி விடவும்
  29. பின் ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்ட்யை சமமாகப் பரப்பவும்
  30. பின் மீண்டும் கேக் துண்டுகளை அடுக்கி சர்க்கரை சிரப் ஊற்றவும்
  31. பின் பாதாம் கஸ்டர்ட்யை சமமாகப் பரப்பவும்
  32. பின் மீண்டும் கேக் துண்டுகளை அடுக்கி சர்க்கரை சிரப் ஊற்றவும்
  33. இறுதியில் ரெடி செய்த ஆரஞ்சு ஜெல்லியை பரவலாக ஊற்றி விடவும்
  34. பின் இதன் மேல் ரசகுல்லாவை அடுக்கி விடவும்
  35. இதை ஒரு 4 மணிநேரம் வரை செட்டாக குளிர விடவும்
  36. மிகவும் கலர் புல்லாகவும் ருசியாகவும் இருக்கும்
  37. இதே இது அழகா குட்டி குட்டி கப்பில் இதே மாதிரி அடுக்கி குளிரவிட்டு அப்படியே பரிமாறுனா மிகவும் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்