வீடு / சமையல் குறிப்பு / நேந்திரம் பழம் ரோல்

Photo of Banana roll by rejaz shiya at BetterButter
475
0
0.0(0)
0

நேந்திரம் பழம் ரோல்

Jan-15-2019
rejaz shiya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நேந்திரம் பழம் ரோல் செய்முறை பற்றி

இது நேந்திரம் பழம் கொண்டு தயார் செய்யப்படும் வித்தியாசமான ஸ்டார்டர் வகை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நேந்திரம் பழம் 5
  2. நெய் தேவையான அளவு
  3. துருவிய தேங்காய் முக்கால் கப்
  4. முந்திரிப் பருப்பு கால் கப்
  5. கிஸ்மிஸ் பழம் கால் கப்
  6. சர்க்கரையை கால் கப்
  7. ஏலக்காய் பொடி அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பழத்தை தோல் சீவி நீண்ட நீண்ட ஸ்லைஸ்களாக நறுக்கவும்
  2. வாணலியில் சிறிது நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை போட்டு நன்றாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. அடுத்த கிஸ்மிஸ் பழத்தை போட்டு நன்றாக வறுத்து அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  4. பிறகு அதில் தேங்காய் போட்டு நன்றாக வறுக்கவும்
  5. பின்பு தேங்காய் நன்கு வந்தவுடன் அதில் சிறிதளவு ஏலக்காய் பொடியை தூவவும்
  6. இப்போது அடுப்பை அணைத்து கொண்டு அதில் முந்திரிப்பருப்பு கிஸ்மிஸ் பழம் சர்க்கரை போட்டு நன்றாக கலக்கவும்
  7. இப்போது தேங்காய் நட்ஸ் சேர்ந்த ஒரு கலவை தயாராக உள்ளது
  8. இதை நன்கு ஆறுவதற்கு தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  9. ஒரு பெரிய பிரஷர் பேனில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் ஸ்லைஸ் ஸ்லைசாக வாழைப்பழத்தை
  10. வைத்து நன்றாக டோஸ்ட் செய்யவும் நெய் ஊற்றி டோஸ்ட் செய்யவும்
  11. இப்போது ஒவ்வொரு வாழைப்பழத்தை எடுத்து அதனுள் தேங்காய் சேர்ந்த கலவையை ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக ரோல் செய்யவும்
  12. இப்படி அனைத்து வாழைப்பழ ஸ்லைஸ்களையும் செய்ய வேண்டும்
  13. இப்போது சுவையான வாழைப்பழ ரோல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்