வீடு / சமையல் குறிப்பு / சென்னா மசாலா

Photo of Channa Masala by Sumaiya shafi at BetterButter
278
0
0.0(0)
0

சென்னா மசாலா

Jan-15-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னா மசாலா செய்முறை பற்றி

சென்னா மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சென்னா 100கிராம்
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  4. பட்டை சிறிய துண்டு
  5. பிரிஞ்சி இலை இரண்டு
  6. சீரகம் ஒரு டீஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  8. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  9. சோம்புத்தூள் அரைடீஸ்பூன்
  10. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  11. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  12. சிவப்பு மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன்
  13. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  14. ஆம்சூர் பவுடர் அரை டீஸ்பூன்
  15. உப்பு தேவைக்கேற்ப
  16. எண்ணெய் நாலு டேபிள் ஸ்பூன்
  17. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் சென்னவை 5 மணி நேரம் ஊறவைத்து பின் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் மற்றும் சீரகம் சேர்க்கவும்
  3. பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளியை சேர்க்கவும்
  5. தக்காளி வதங்கியதும் சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள்,மஞ்சள் தூள் ,சோம்பு தூள், சீரக தூள்,உப்பு மற்றும் அம்சுர் சேர்த்து கிளறவும்
  6. அதில் முக்கால்வாசி சென்னாவை சேர்க்கவும்
  7. கால்வாசி சென்னாவை அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  8. அரைத்த கலவையை அதில் சேர்த்து தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்
  9. கடைசியில் மல்லி இலை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்