வீடு / சமையல் குறிப்பு / ஹவாதுலி பிஸ்

Photo of Havaadhulee Bis by Mohamed Zeaudeen at BetterButter
640
0
0.0(0)
0

ஹவாதுலி பிஸ்

Jan-15-2019
Mohamed Zeaudeen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஹவாதுலி பிஸ் செய்முறை பற்றி

Maladives special மாலத்தீவு உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேவையான பொருட்கள்:
  2. மேல் மாவுக்கு:
  3. மைதா ஒரு கப்
  4. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  5. கொதிக்கும் நீர் தேவைக்கு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. ஸ்டப்பிங் செய்ய:
  8. ஸ்மோக்டு டூனா மீன் 1 துண்டு
  9. வெங்காயம் ஒன்று
  10. கிதியோ மிருஸ் _ பாதி
  11. இஞ்சி சிறிது
  12. கருவேப்பிலை சிறிது
  13. எலுமிச்சை பழம் பாதி
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
  16. மஞ்சள் தூள் சிறிது
  17. மசாலா செய்ய தேவையான பொருட்கள்
  18. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  19. வெங்காயம் பாதி
  20. கிதியோ மிருஸ் பாதி
  21. கருவேப்பிலை சிறிது
  22. ரம்பை இலை 2 துண்டு
  23. பூண்டு 2 பல்
  24. வறுத்த கறி தூள் ஒரு தேக்கரண்டி
  25. மிளகாய்த் தூள் கால் தேக்கரண்டி
  26. தேங்காய் பால் 2 மேஜைக்கரண்டி
  27. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை இஞ்சி கிதியோ மிருஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  3. பிசைந்த அவற்றுடன் பொரித்த மீன் தேங்காய் துருவல் எலுமிச்சைச் சாறு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பிசைந்த கலவையை முட்டை வடிவில் உருண்டைகளாக பிடிக்கவும்
  5. மைதாவில் எண்ணெய் உப்பு சேர்த்து கொதிக்கும் நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்
  6. பிசைந்த மாவை மீன் கலவை உருண்டையை எண்ணிக்கைக்கு ஏற்ப சிறு உருண்டைகளாக்கவும்
  7. ஒவ்வொரு உருண்டையையும் சிறிதாக தட்டி உள்ளே மீன் கலவை உருண்டையை வைத்து மூடவும்
  8. மூடும்போது மைதா மெல்லியதாக இருக்க வேண்டும்
  9. பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீர் மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொதிக்க தொடங்கியதும் அதிக தீயில் வைத்து முட்டை வடிவில் தயார் செய்த உருண்டைகளை அதில் போட்டு வேக விடவும்
  10. மூடி வைக்கத் தேவையில்லை
  11. உருண்டைகள் வெந்து மேலே மிதந்து வந்ததும் வடித்து எடுக்கவும்
  12. மசாலா செய்ய தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்
  13. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் கருவேப்பிலை ரம்பை இலை மிளகாய் பூண்டு அதிகம் சேர்த்து வதக்கி மிளகாய் தூள் உப்பு போட்டு வதக்கவும்
  14. தேங்காய்ப் பால் விட்டு கலந்து விடவும்
  15. தூள் வாசம் முழுவதும் போனதும் வேக வைத்த முட்டை உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் பிரட்டி எடுக்கவும்
  16. சுவையான மாலத்தீவு special havaadhulee bis ready.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்