வீடு / சமையல் குறிப்பு / கடல் வகை உணவு விருந்து

Photo of Sea Food Party by Sumaiya shafi at BetterButter
378
1
0.0(0)
0

கடல் வகை உணவு விருந்து

Jan-15-2019
Sumaiya shafi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கடல் வகை உணவு விருந்து செய்முறை பற்றி

கடல் வகை உணவு விருந்து( மீன்,இறால்)

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மீன் குழம்பு செய்வதற்கு
  2. வஞ்சிரம் மீன் 11/2 கிலோ
  3. தேங்காய்ப் பால் நான்கு கப்
  4. சின்ன வெங்காயம் 10
  5. தக்காளி ஒன்று
  6. பெருங்காயத் தூள் ஒரு பின்ச்
  7. குழம்பு மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  8. காஷ்மீர் மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  10. புளி இரண்டு எலுமிச்சை அளவு
  11. கடுகு உளுத்தம் பருப்பு வெந்தயம் சீரகம் தாளிக்க
  12. பூண்டு 10 பல்
  13. பச்சைமிளகாய்-2
  14. கறிவேப்பிலை சிறிதளவு
  15. மல்லி இலை சிறிதளவு
  16. உப்பு தேவைக்கு ஏற்ப
  17. எண்ணெய் நாலு டேபிள் ஸ்பூன்
  18. வஞ்சிரம் மீன் பொரிப்பதற்கு
  19. குழம்பு மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  20. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  21. உப்பு தேவைக்கேற்ப
  22. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  23. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  24. கலர் பொடி அரை டீஸ்பூன் விருப்பப்பட்டால்
  25. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  26. சோள மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
  27. அரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
  28. லெமன் ஜுஸ் 2 டேப்லெஸ்பூன்
  29. ஆலிவ் ஆயில் 3 டீஸ்பூன்
  30. அல்லது நார்மல் ஆயில்
  31. எண்ணெய் பொரிப்பதற்கு
  32. சுரக்காய் பருப்பு செய்வதற்கு
  33. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  34. கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தாளிக்க
  35. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  36. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  37. சுரைக்காயை 1 சிறியது
  38. மைசூர் பருப்பு 4 டேபிள்ஸ்பூன்
  39. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  40. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  41. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  42. உப்பு தேவைக்கேற்ப
  43. கருவேப்பிலை சிறிதளவு
  44. பச்சை மிளகாய் ஒன்று
  45. முருங்கக்காய் தேங்காய் பால் செய்வதற்கு
  46. முருங்கைக்காய் 2
  47. எண்ணெய் மூன்று டேபிள் ஸ்பூன்
  48. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  49. தக்காளி ஒன்று பேஸ்டாக
  50. உப்பு தேவைக்கேற்ப
  51. தேங்காய் பால் ஒன்றரை கப்
  52. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  53. காஷ்மீரி மிளகாய் ஒரு டீஸ்பூன்
  54. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  55. கருவேப்பிலை சிறிதளவு
  56. மல்லி இலை சிறிதளவு
  57. கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க
  58. இரால் தொக்கு செய்வதற்கு
  59. இறால் 1/2 கிலோ
  60. வெங்காயம் 4 பொடியாக நறுக்கியது
  61. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  62. கருவேப்பிலை சிறிதளவு
  63. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  64. மல்லி இலை சிறிதளவு
  65. பச்சைமிளகாய்-2
  66. சிவப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  67. குழம்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  68. உப்பு தேவைக்கேற்ப
  69. எண்ணெய்
  70. லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
  71. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  72. மோர் ரசம் செய்வதற்கு
  73. மோர் 200 ml
  74. உப்பு தேவைக்கேற்ப
  75. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  76. கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தாளிக்க
  77. கருவேப்பிலை தாளிக்க
  78. காய்ந்த மிளகாய் தாளிக்க
  79. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. மீன் குழம்பு செய்வதற்கு
  2. முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கனத்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும்
  4. எண்ணெய் சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் சேர்க்கவும்
  5. பின் பெருங்காயத்தூள் சேர்க்கவும்
  6. பின் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  7. வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  8. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்
  9. பின் சிவப்பு மிளகாய்த்தூள் அதில் சேர்க்கவும்
  10. ஒரு பாத்திரத்தில் பத்து நிமிடம் புளியை ஊற வைத்து அதை பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.அதில் குழம்பு மிளகாய் தூள்,உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்க்கவும்.
  11. பின் அதை இந்த தாளிப்பில் ஊற்றவும்
  12. நன்கு கொதிக்க விடவும்
  13. நன்கு கொதித்த பின் மீனை அதில் சேர்த்து பத்து நிமிடம் வேக விடவும்
  14. பின் 5 நிமிடம் சிம்மில் வைத்து ஆப் செய்யவும்
  15. வஞ்சிரம் மீன் பொரிப்பதற்கு
  16. மீனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
  17. ஒரு பாத்திரத்தில் குழம்பு மிளகாய் தூள், சிவப்பு மிளகாய் தூள், சோள மாவு, மிளகுத்தூள்,மஞ்சள் தூள், உப்பு,அரிசி மாவு,சீரக தூள்,கலர் பொடி,லெமன் ஜூஸ் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்
  18. இந்த மசாலாவை பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்
  19. பின் அதை வஞ்சிரமீன் மேல் தடவி வைத்துக் கொள்ளவும்
  20. ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  21. இறால் தொக்கு செய்வதற்கு
  22. இறாலை நன்கு கழுவி சிவப்பு மிளகாய் தூள், உப்பு,மஞ்சள் தூள், லெமன் ஜுஸ், சோலா மாவு மற்றும் எண்ணெய் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்
  23. அரைமணி நேரம் ஊறவைத்து பின் பொரித்து எடுக்கவும்
  24. பின் பொரித்த அதே வாணலியில் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  25. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  26. உப்பு சேர்த்து மூடி போட்டு வேகா விடவும்.
  27. நன்கு வெந்த பிறகு சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மல்லி இலை சேர்த்து வதக்கவும்
  28. கடைசியில் பொரித்த இறாலை அதில் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்
  29. சுரக்காய் பருப்பு செய்வதற்கு
  30. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு,பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  31. பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்
  32. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்
  33. தக்காளி லேசாக வதங்கியதும் சுரைக்காயை சேர்க்கவும்
  34. மஞ்சள் தூள் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்
  35. பின் பருப்பு சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்
  36. 5 விசில் போட்டு இறக்கவும்
  37. முருங்கக்காய் தேங்காய் பால் செய்வதற்கு
  38. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் உளுத்த பருப்பு சேர்த்து தாளிக்கவும்
  39. கறிவேப்பிலை பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  40. வெங்காயம் வதங்கியதும் தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  41. பின் முருங்கைக்காய் அதனுடன் சேர்த்து மஞ்சள் தூள் ,மிளகாய் தூள்,உப்பு மற்றும் சீரக தூள் சேர்த்து கிளறி விடவும்.
  42. தேங்காய்ப்பால் அதனுடன் சேர்த்து 3 விசில் போட்டு இறக்கவும்.
  43. மோர் ரசம் செய்வதற்கு
  44. மோர் உப்பு,மல்லி இலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும்.
  45. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் சேர்த்து தாளிக்கவும்
  46. பின் கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி அடித்து வைத்த மோரை அதில் ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்