வீடு / சமையல் குறிப்பு / நிஹாரி மட்டன் பாயா

Photo of Hyderabad special Nihari Mutton Paaya by Sumaiya shafi at BetterButter
877
1
0.0(0)
0

நிஹாரி மட்டன் பாயா

Jan-15-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நிஹாரி மட்டன் பாயா செய்முறை பற்றி

ஹைதராபாத் ஸ்பெஷல் நிஹாரி மட்டன் பாயா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஹைதராபாத்
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் பாயா ஒரு கிலோ
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  4. காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  7. இஞ்சித் தூள் ஒரு டீஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. ஏலக்காய் 4
  10. பட்டை இரண்டு துண்டு
  11. லவங்கம் 6
  12. மல்லி ஒரு டேபிள்ஸ்பூன்
  13. சீரகம் ஒரு டீஸ்பூன்
  14. சோம்பு ஒரு டீஸ்பூன்
  15. மிளகு 2 டீஸ்பூன்
  16. shahi jeera ஒரு டீஸ்பூன்
  17. நட்சத்திர சோஸ்-2
  18. ஜாதிபத்திரி 1
  19. மல்லி இலை சிறிதளவு
  20. கோதுமை மாவு 3 டேபிள்ஸ்பூன்
  21. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் பாயாவை சுடு தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துக் கொள்ளவும்
  2. பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெங்காயம் ,பட்டை,ஏலக்காய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. கழுவி வைத்த மட்டன் பாயாவை அதில் சேர்த்து கிளறவும்
  4. தண்ணீர் ஊற்றி 10 முதல் 15 விசில் வரை போடவும்
  5. நன்கு வேக வைத்து கொள்ளவும்
  6. நிஹரி செய்வதற்கு தேவையான மசாலா பொருட்களை எடுத்து வைக்கவும்
  7. மசாலா பொருள்கள்
  8. பின் இது எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  9. வேக வைத்த பாயாவை அதன் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  10. பின் அரைத்த மசாலா மற்றும் உப்பு அதில் சேர்த்து கொதிக்க விடவும்
  11. கோதுமை மாவை தண்ணீரில் கரைத்து பாயாவில் ஊற்றி கொதிக்க விடவும்.
  12. 10 நிமிடம் கழித்து மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
  13. இஞ்சி துண்டு, எலுமிச்சை பழம் மற்றும் வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்