வீடு / சமையல் குறிப்பு / பனீர் நிறைத்த ஜாலர் சுருள்

Photo of Paneer stuffed Jala Rolls by Raihanathus Sahdhiyya at BetterButter
233
0
0.0(0)
0

பனீர் நிறைத்த ஜாலர் சுருள்

Jan-15-2019
Raihanathus Sahdhiyya
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பனீர் நிறைத்த ஜாலர் சுருள் செய்முறை பற்றி

மலேசியாவின் புகழ்பெற்ற சிற்றுண்டிகளில் ஒன்றுதான் ஜாலர் எனப்படும் ரொட்டி ஜாலா...இதை நம் நாட்டு புகழ்பெற்ற க்ரில் பனீர் வைத்து புதுமையாக முயற்சித்துள்ளேன். பார்ட்டி சமயங்களில் ஸ்டார்ட்டராகவோ, சிற்றுண்டியாகவோ சாப்பிட ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பான் ஆசியன்
  • பான் பிரை
  • விஸ்கிங்
  • கிரில்லிங்
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. க்ரில் பனீர் செய்ய:
  2. பனீர் : 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கி)
  3. மிளகாய்த்தூள்: 1 தேக்கரண்டி
  4. உப்பு: 1 தேக்கரண்டி
  5. மல்லித்தூள்: 1/2 தேக்கரண்டி
  6. சீரகத்தூள்: 1/2 தேக்கரண்டி
  7. மிளகுத்தூள்: 1/4தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள்: 1/4தேக்கரண்டி
  9. இஞ்சிப்பூண்டு விழுது: 1 மேசைக்கரண்டி
  10. அரை எலுமிச்சையின் சாறு
  11. காய்கறிக் கலவை செய்ய:
  12. எண்ணெய் : 2 தேக்கரண்டி
  13. வெங்காயம் : 2 (நீளமாக நறுக்கியது)
  14. தக்காளி: 1(நீளமாக நறுக்கியது)
  15. குடை மிளகாய் : 1 (நீளமாக நறுக்கியது)
  16. மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி
  17. உப்பு : 1/2 தேக்கரண்டி
  18. ஜாலர் செய்ய :
  19. மைதா மாவு / கோதுமை மாவு: 1 1/4 கப்
  20. உப்பு : 1 தேக்கரண்டி
  21. மஞ்சள் தூள் : 1தேக்கரண்டி
  22. தேங்காய்ப்பால் : 1 கப்
  23. தண்ணீர் : 1/2 - 1 கப் (தேவைக்கேற்ப)

வழிமுறைகள்

  1. முதலில் க்ரில் பனீர் செய்ய தேவையான அனைத்து மசாலாக்களையும் பனீர் துண்டுகளில் பிரட்டி 1 மணிநேரம் ஊறவைக்கவும்
  2. பின்னர், க்ரில் அல்லது தவாவில் நெய் விட்டு அனைத்து பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்
  3. பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. அக்கலவையில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிக் கலவை தயார்
  6. ஜாலர் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தும் கட்டியில்லாமல் கலக்கவும்.
  7. மாவு திக்காக இல்லாமல் மெலிதாக இருக்க வேண்டும். வடிகட்டி கொண்டு மாவை வடிகட்டும்
  8. தவாவில், நெய் விட்டு ஜாலர் கப்பில் உள்ள மாவை வட்டமாக ஊற்றவும்
  9. குறைந்த தீயில் வைத்து ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போடவும்
  10. ஜாலரின் நடுவில் காய்கறிக் கலவை 1 ஸ்பூன் வைத்து , அதன் மீது க்ரில் பனீர் 1 துண்டு வைத்து ஜாலரை சுருட்டி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்