வீடு / சமையல் குறிப்பு / பாரம்பரிய சவுத் இந்தியன் வெஜிடேரியன் பார்ட்டி

Photo of Traditional south Indian veg lunch party by Abinaya bala at BetterButter
100
0
0.0(0)
0

பாரம்பரிய சவுத் இந்தியன் வெஜிடேரியன் பார்ட்டி

Jan-15-2019
Abinaya bala
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாரம்பரிய சவுத் இந்தியன் வெஜிடேரியன் பார்ட்டி செய்முறை பற்றி

பொதுவாக சவுத் இந்தியாவில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் செய்யப்படும் சிறந்த மதிய உணவு

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய
 2. நெல்லிக்காய் 10
 3. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சிறிதளவு
 4. தாளிக்க கடுகு வெந்தயம் கருவேப்பிலை
 5. தயிர் பச்சடி செய்ய
 6. தடியங்காய் 100
 7. மசாலா க்கு தேங்காய் பூண்டு சீரகம் மற்றும் பச்சை மிளகாய்
 8. தாளிக்க எண்ணெய் கடுகு கறிவேப்பிலை
 9. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பொரியல் செய்ய
 10. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் தலா ஒரு கப்
 11. மசாலாவுக்கு தேங்காய் பூண்டு சீரகம் மற்றும் பச்சை மிளகாய்
 12. தாளிக்க கடுகு கறிவேப்பிலை எண்ணெய்
 13. வெண்டைக்காய் பச்சடி செய்ய
 14. வெண்டக்காய் 200 கிராம்
 15. வெங்காயம் தக்காளி தலா 2
 16. புளி எலுமிச்சை அளவு
 17. மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு
 18. தாளிக்க கடுகு கறிவேப்பிலை
 19. மசாலாவுக்கு தேங்காய் பூண்டு சீரகம் பச்சை மிளகாய்
 20. அவியல் செய்ய
 21. கேரட் பீன்ஸ் ஒரு கப்
 22. உருளைக்கிழங்கு அரை கப்
 23. முருங்கைக்காய் 1
 24. மாங்காய் சிறிதளவு
 25. கத்தரிக்காய் ஒரு கப்
 26. வெங்காயம் ஒன்று
 27. அவரைக்காய் அரை கப்
 28. தேங்காய் தண்ணீர் அரை கப்
 29. மசாலாவுக்கு தேங்காய் பூண்டு சீரகம் பச்சை மிளகாய்
 30. தாளிக்க தேங்காயெண்ணெய் கடுகு கருவேப்பிலை
 31. பருப்பு பாயசம் செய்ய
 32. ஜவ்வரிசி சிறு பருப்பு தலா அரை கப்
 33. மண்டை வெல்லம் ஒன்றரை கப்
 34. சேமியா சிறிதளவு
 35. தேங்காய்ப் பால் மூன்று கப்
 36. நெய் முந்திரி பருப்பு ஏலக்காய் தூள் பாதாம் பிஸ்தா தேவையான அளவு
 37. இடி சாம்பார் செய்ய
 38. கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் மாங்காய் கேரட் உருளைக்கிழங்கு தலா இரண்டு
 39. துவரம்பருப்பு இரண்டு கப்
 40. புளி எலுமிச்சை அளவு
 41. இடி சாம்பார் பொடி செய்ய
 42. வெந்தயம் சீரகம் மிளகு சிறிது கடுகு சிவப்பு மிளகாய் மல்லி
 43. தாளிக்க கடுகு வெந்தயம் எண்ணெய் கருவேப்பிலை சிகப்பு மிளகாய்

வழிமுறைகள்

 1. நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய முதலில் நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் கடுகு வெந்தயம் சேர்த்து தாளித்து பின் வெட்டி வைத்த நெல்லிக்காயை சேர்த்து உப்பு மற்றும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கினால் நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி
 2. தயிர் பச்சடி செய்ய முதலில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்த தடியங்காய் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும் பின்னர் தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைத்த விழுதை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்
 3. நீர் வற்றியவுடன் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் தேவையான அளவு தயிர் சேர்த்து வைத்தால் சுவையான தயிர் பச்சடி ரெடி
 4. முட்டைகோஸ் பீன்ஸ் கேரட் பொரியல் செய்ய சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்த முட்டை கோஸ் கேரட் பீன்ஸ் ஆகியவற்றை முதலில் நீரில் உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்
 5. பின்னர் அதனுடன் தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் பூண்டு ஆகியவற்றை அரைத்து அதனுடன் சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கி இறக்கினால் சுவையான முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பொரியல் ரெடி
 6. வெண்டைக்காய் பச்சடி செய்ய முதலில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்த வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் புளி நீர் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்
 7. பின்னர் தேங்காய் பூண்டு சீரகம் ஆகியவற்றை அரைத்து அதன் விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் பச்சடி ரெடி
 8. பருப்பு பாயசம் செய்ய முதலில் ஜவ்வரிசி மற்றும் சிறு பருப்பை வாணலியில் நன்கு வறுத்துக் கொள்ளவும் சிவக்க வறுத்துக்கொள்ளவும்
 9. பின்னர் தேங்காய் பாலில் ஜவ்வரிசி மற்றும் சிறுபருப்பு சேமியா ஆகியவற்றை சேர்த்து நன்கு வேகவிடவும்
 10. தேன் தேவையான அளவு மண்டை வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
 11. கடைசியாக நெய்யில் தாளித்து முந்திரி பருப்பு மற்றும் பிஸ்தா பாதாம் பருப்பை சேர்த்து இறக்கினால் சுவையான பருப்பு பாயாசம் ரெடி
 12. இடி சாம்பார் செய்ய முதலில் துவரம்பருப்பை குக்கரில் மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்
 13. பின்னர் தேவையான காய்கறிகளை துண்டுகளாக வெட்டி வைத்து அதனுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும்
 14. பின்னர் மஞ்சள் தூள் சிறிதளவு சீரகத்தூள் சேர்த்து நன்கு வேகவைக்கவும்
 15. இதனுடன் வேக வைத்து மசித்து எடுத்து வைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
 16. கடைசியாக வறுத்து வைத்து பொரித்து எடுத்த இனி சாம்பார் பொடியை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்
 17. சுவையான இடி சாம்பார் ரெடி
 18. அவியல் செய்ய முதலில் தேவையான அனைத்து காய்களையும் நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்
 19. பின்னர் அதனை தேங்காய் நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்
 20. தேங்காய் சீரகம் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைத்த கலவையை காய்கறியுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு காய்கறி வெந்தவுடன் இறக்கினால் சுவையான அவியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்