BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / துளசி ரசம்

Photo of Holy Basil Leaves Rasam by Priya Suresh at BetterButter
0
0
0(0)
0

துளசி ரசம்

Jan-16-2019
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

துளசி ரசம் செய்முறை பற்றி

காரசாரமான மருத்துவ குணம் மிக்க துளசியை வைத்து செய்த ரசம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • మిళితం
  • ఉడికించాలి
  • సూపులు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 20 துளசி இலை
  2. 1 டீஸ்பூன் துவரம்பருப்பு
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 1/2டீஸ்பூன் மிளகு
  5. 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  6. 2 தக்காளி
  7. 1 டீஸ்பூன் நெய்
  8. 1/2டீஸ்பூன் கடுகு
  9. 2 காய்ந்த மிளகாய்
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. 1/2டீஸ்பூன் பெருங்காயம்
  12. 1/2டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  13. மல்லி இலை தேவைக்கு

வழிமுறைகள்

  1. தண்ணீரில் சிறிது எண்ணையை காயவைத்து துவரம் பருப்பு, கொத்தமல்லி விதை ,மிளகு, சீரகம் ,அனைத்தையும் நல்ல வாசம் வரும் வரை வறுக்கவும்
  2. துளசி இலையை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  4. தக்காளி விழுதுடன் தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்த தூளை சேர்த்து ஒரு கொதி விடவும்
  5. கொதி வந்ததும் அரைத்த துளசி இலைகளை சேர்த்து, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  6. ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி கடுகு காய்ந்த மிளகாய் பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும்
  7. தாளித்தவற்றை ரசத்துடன் சேர்த்து கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை நிறுத்தவும்
  8. சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்