விவிகா அல்லது பதனீர் இனிப்பு இட்லிகள் | Vivika or Pathaneer Sweet Idlies in Tamil

எழுதியவர் Jofy Abraham  |  31st Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vivika or Pathaneer Sweet Idlies by Jofy Abraham at BetterButter
விவிகா அல்லது பதனீர் இனிப்பு இட்லிகள்Jofy Abraham
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

611

0

Video for key ingredients

 • How to make Idli/Dosa Batter

விவிகா அல்லது பதனீர் இனிப்பு இட்லிகள் recipe

விவிகா அல்லது பதனீர் இனிப்பு இட்லிகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vivika or Pathaneer Sweet Idlies in Tamil )

 • 3 கப் - பச்சை அரிசி
 • 1/2 கப் - பதனீர் அல்லது கள்
 • 9 தேக்கரண்டி - சர்க்கரை
 • 1 தேக்கரண்டி - முந்திரி பருப்பு நறுக்கப்பட்டது
 • 1 தேக்கரண்டி - உளர் திராட்சை
 • 2 தேக்கரண்டி - மெலிதாக நறுக்கப்பட்ட தேங்காய்
 • 1/2 தேக்கரண்டி - ஏலக்காய் பொடி
 • சமையல் சோடாமாவு ஒரு சிட்டிகை
 • தண்ணீர் - தேவையான அளவு
 • உப்பு - சுவைக்கு எற்றபடி
 • 4 - வாழைப்பழம் (காஸ்லி வகை)
 • 1/2 கப் - தோசை மாவு

விவிகா அல்லது பதனீர் இனிப்பு இட்லிகள் செய்வது எப்படி | How to make Vivika or Pathaneer Sweet Idlies in Tamil

 1. அரிசியை நன்றாகக் கழுவி 1 மணி நேரத்திற்கு ஊர வைக்கவும்.
 2. நன்றாக தண்ணீரை ஈர்த்துவிட்டு, ஒரு துணியில் அரிசியை பரப்பி எல்லா ஈரப்பதமும் போகும்வரை காய வைக்கவும். ஒரு மணி நேரத்திற்கு மேல் காயவைக்கவேண்டாம்.
 3. அரிசியை மாவாக அரைத்துக்கொள்ளவும். மாவை பகுதிகளாக சலித்துக்கொள்ளவும். சலித்தபிறகு, ரவா போன்ற உடைந்த அரிசி மீதமிருக்கும். தொடர்ந்து சேகரிக்கவும். இது குருணை அரிசி எனப்படும். மாவை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 4. குருணை அரிசி எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். தண்ணீரை குருணை:தண்ணீர்=1:3 விகிதத்தில் சேர்க்கவும். தேவையான உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.
 5. தொடர்ந்து கலக்கிக்கொண்டே குருணை அரிசிக் கலவையைக் கொதிக்கவைத்து, அடர்த்தியான கூழாக மாறியதும் தண்ணீர் சேர்க்கவும்.
 6. கூழை குளிர விடவும்.
 7. கூழில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். இதற்கிடையில் கலவையை உங்கள் கைகளால் கலக்கிக்கொண்டே இருக்கவும். கூழுடன் மாவு ஈரமாகும்வரை முழுமையாக கலக்கவும்.
 8. பழைய தோசை மாவு அரை கப் சேர்த்து உங்கள் கைகளால் கலக்கவும். ஒட்டுமொத்த மாவுக் கலவையும் அடர்த்தியாக ஒழுகாமல் இருக்கும். அப்படித்தான் நமக்கு வேண்டும். பதனீரும் சர்க்கரையும் சேர்க்கப்பட்டதும், மாவில் நிறை நீர் வெளியேறும்.
 9. புளித்த பதனீர்/கள்ளை மாவுக்கலவையின் மீது சேர்க்கவும். மாவுக் கலவையில் கரண்டியைக் கொண்டு ஓட்டைகள் போடவும். கள் மாவுக்கலவைக்குள் புகுந்து நொதித்தலுக்கு உதவும்.
 10. இரவு முழுவதும் அப்படியே உங்கள் சமையலறையில் வைக்கவும்.
 11. அடுத்தநாள் மாவு தளர்ந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். மசிக்கப்பட்ட வாழைப்பழம், சர்க்கரை, ஏலக்காய் பொடியைச் சேர்க்கவும். கைகளால் நன்றாகக் கலக்கவும். மாவை சுவைத்துப்பார்த்து, தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
 12. பருப்புகள், உலர் திராட்சை, தேங்காய் பத்தைகளைச் சேர்க்கவும். சமையல் சோடாவை இட்லி வேகவைப்பதற்கு முன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 13. பட்டுகளில் எண்ணெய் தடவி மாவை இட்டி குண்டானில் ஊற்றவும். 8லிருந்து 9 நிமிங்களுக்கு வேகவைக்கவும். உங்கள் வாசனைமிகு விவிகா தயார்:)

எனது டிப்:

கள்ளுக்கு மாற்று - 1/2 கப் தேங்காய் நீர் (இளநீர் தண்ணீர் அல்ல) + 1 தேக்கரண்டி சர்க்கரை, ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடவும்.

Reviews for Vivika or Pathaneer Sweet Idlies in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.