தவா பன்னீர் டிக்கா | Tawa Paneer Tikka in Tamil

எழுதியவர் Saba Rehman  |  31st Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Tawa Paneer Tikka recipe in Tamil,தவா பன்னீர் டிக்கா, Saba Rehman
தவா பன்னீர் டிக்காSaba Rehman
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  மணிநேரம்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

5195

0

தவா பன்னீர் டிக்கா recipe

தவா பன்னீர் டிக்கா தேவையான பொருட்கள் ( Ingredients to make Tawa Paneer Tikka in Tamil )

 • 400 கிராம் பன்னீர் (காட்டேஜ் வெண்ணெய்)
 • 1 1/2 கப் - தயிர்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1/2 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி - கரம் மசாலா தூள்
 • 1 தேக்கரண்டி - சாட் மசாலா
 • 1/4 தேக்கரண்டி - சீரகத் தூள்
 • 1/2 தேக்கரண்டி - தந்தூரி மசாலா
 • 2 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
 • 5 தேக்கரண்டி - எண்ணெய் அல்லது வெண்ணெய்
 • 1 சிட்டிகை சிவப்பு உணவு நிறமி
 • 2 பச்சை குடமிளகாய் 2 இன்ச் துண்டுகளாக நறுக்கப்பட்டது
 • 1 பெரிய வெங்காயம் பக்கவாட்டில் 2 இன்ச் துண்டுகளாக நறுக்கப்பட்டது
 • 10 முள் குச்சிகள்

தவா பன்னீர் டிக்கா செய்வது எப்படி | How to make Tawa Paneer Tikka in Tamil

 1. பன்னீரை (காட்டேஜ் பன்னீர்) 2 இன்ச் துண்டுகளாக நறுக்கிக்கொள்க
 2. அனைத்து மசலாக்களையும் பவுடர்களையும் ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் எலுமிச்சையோடு சேர்த்துக் கலந்துகொள்க (உப்பு, சிவப்பு மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், சாட் மசாலா, தந்தூரி மசாலா, சீரகப்பொடி, சிவப்பு உணவு நிறமி)
 3. இப்போது பன்னீரை (காட்டேஜ் பன்னீர்) இந்த கலவையில் கலந்து சில மணி நேரம் மேரினேட் செய்யவும்.
 4. குடமிளகாயைச் சேர்த்து மெதுவாகக் கலந்துகொள்க.
 5. வெங்காயத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
 6. இப்போது பிரிஜ்ஜில் ஒரு மணி நேரத்திற்கு வைக்கவும்.
 7. குடமிளகாய், வெங்காயம், பன்னீர், வெங்காயம் மற்றும் குடமிளகாய்த்துண்டுகளில் முறையாக முள் குச்சிகளை எடுத்து கோர்த்துக்கொள்ளவும். ஒவ்வொரு முள்குச்சியிலும் நீங்கள் மேரினேட் செய்த இரண்டு பன்னீர் துண்களைச் சேர்க்கவேண்டும்.
 8. நான்-ஸ்டிக் தவாவைச் சூடுபடுத்திக்கொள்க. 1 தேக்கரண்டி எண்ணெய் அல்லது வெண்ணெயை தவாவில் ஊற்றிக்கொள்ளவும்.
 9. நீங்கள் மேரினேட் செய்த பன்னீர் டிக்கா குச்சிகளை தவாவில் வைத்து ஒரு மூடியால் மூடவும்.
 10. சிறு தீயில் வேகவைக்கவும். இடையிடையே பன்னீர் டிக்கா குச்சிகளை திருப்பி நன்றாக வேகவைக்கவேண்டும். ஒரு பிரஷினால் எண்ணெயைத் தடவவும்.
 11. ஒரு தட்டில் எடுத்துககொள்ளவும்.

எனது டிப்:

கலவையை மேரினேட் செய்யும்போது ஓமத்தைக்கூட நீங்கள் பயன்படத்தலாம். சமைத்ததும் நல்ல சுவையையும் நறுமணத்தையும் கொடுக்கும்.

Reviews for Tawa Paneer Tikka in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.