வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைஸி சிக்கன் ஃப்ரை

Photo of Spicy Chicken Fry by Jayasakthi Ekambaram at BetterButter
233
0
0.0(0)
0

ஸ்பைஸி சிக்கன் ஃப்ரை

Jan-20-2019
Jayasakthi Ekambaram
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைஸி சிக்கன் ஃப்ரை செய்முறை பற்றி

கோழிக்கறியுடன் தயிர் எலுமிச்சம்பழம் மிளகாய் தூள் சேர்த்து செய்யும் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் முக்கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி-2
  4. எலுமிச்சம்பழம் 1
  5. தயிர் 50 கிராம்
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  9. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  10. கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  11. உப்புத் தூள் ஒன்றரை ஸ்பூன்
  12. கறிவேப்பிலை ஒரு கொத்து
  13. கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
  14. சமையல் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் உள்ள தண்ணீரை வடிகட்டவும்
  2. சிக்கனுடன் தயிர் எலுமிச்சை சாறு இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தனியா தூள் மிளகு தூள் உப்பு தூள் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊறவைக்கவும்
  3. ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும்
  4. எண்ணெய் சூடானதும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்
  5. உடனே நறுக்கிய தக்காளியை போட்டு 2 நிமிடம் வதக்கவும்
  6. கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  7. வெங்காயம் தக்காளி அதிக நேரம் வதக்கக்கூடாது
  8. இப்போது ஊற சிக்கனை அதில் எடுத்து போட ஆரம்பிக்கவும்
  9. எல்லா சிக்கனையும் சேர்த்து மூடி வைத்து பெரிய தீயில் 5 நிமிடம் வேக விடவும்
  10. நன்றாக கொதித்த பிறகு அடுப்பின் தீயைக் குறைத்து மூடி வைத்து சிறு தீயில் 25 நிமிடம் வேக விடவும்
  11. தண்ணீர் சுண்டி சிக்கன் நன்றாக வெந்ததும் அடுப்பை ஆஃப் செய்து கொத்தமல்லித் தழை தூவவும்
  12. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்