வீடு / சமையல் குறிப்பு / மியான்மார் மாசி சம்பா

Photo of MYANMAR Maasi chamba by Waheetha Azarudeen at BetterButter
523
2
0.0(0)
0

மியான்மார் மாசி சம்பா

Jan-21-2019
Waheetha Azarudeen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மியான்மார் மாசி சம்பா செய்முறை பற்றி

இது ஒரு காரசாரமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய வெங்காயம் மூன்று
  2. பழுத்த தக்காளி பழம் 4
  3. காய்ந்த மிளகாய் வத்தல் 15
  4. பூண்டு 20 பல்
  5. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. பொடித்த மாசி கருவாடு 1/4 கப்
  8. எண்ணெய் கால் கப்

வழிமுறைகள்

  1. முதலில் பூண்டு மற்றும் மிளகாய் வத்தல் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. பின்பு வாணலியில் எண்ணெய் சூடாக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின்பு அதில் அரைத்து வைத்த பூண்டு மிளகாய் கலவையை சேர்த்து வதக்கவும்
  5. பச்சை வாசம் பிரியும் வரை வதக்கவும்
  6. பின்பு அதில் பொடித்த மாசி கருவாடு சேர்க்கவும்
  7. நன்கு வதக்கவும்
  8. பச்சை வாசம் பிரியும் வரை நன்கு வதக்கவும்
  9. பின்பு அதில் மஞ்சள் பொடி உப்பு சேர்க்கவும்
  10. பின்பு அதில் நறுக்கிய தக்காளியை பிழிந்து சேர்க்கவும்
  11. நன்கு வதக்கிக் கொள்ளவும்
  12. மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்
  13. பின்பு 10 நிமிடம் கழித்து திறக்கவும்
  14. பின்பு மூடி விடாமல் 10 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.. எண்ணெய் பிரிந்த உடன் அடுப்பை அணைத்து விட்டு பரிமாறவும்
  15. சுவையான மியான்மர் மாசிச் சம்பல் தயார்
  16. அவித்த முட்டையுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்