வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்கு ஃப்ரை

Photo of Yam fry by Navas Banu L at BetterButter
313
0
0.0(0)
0

சேனைக்கிழங்கு ஃப்ரை

Jan-22-2019
Navas Banu L
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சேனைக்கிழங்கு ஃப்ரை செய்முறை பற்றி

சேனைக்கிழங்கு ஃப்ரை தேவையான பொருட்கள் சேனைக்கிழங்கு - அரை கிலோ மிளகு தூள் - 2 டீஸ்பூண் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூண் பெருஞ்சீரகம் தூள் - 1 டீஸ்பூண் நல்லமிளகு தூள் - அரை டீஸ்பூண் கரம் மஸாலா தூள் - 1 டீஸ்பூண் இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூண் உப்பு - தேவைக்கு பொரிப்பதற்கு எண்ணை. கறிவேப்பிலை - 2 தண்டு. செய்முறை சேனைக்கிழங்கை தோல் சீவி நன்றாக கழுகி விட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ( சேனைக்கிழங்கை நறுக்கி விட்டு கழுவக் கூடாது.அப்படி கழுவினால் கிழங்கு ரொம்ப கடினமாகி விடும். வேகுவதற்கும் நிறைய நேரம் எடுக்கும்) துண்டுகளாக்கிய சேனைக்கிழங்கில் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா மஸாலாவும்,தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். மஸாலா கிழங்கின் எல்லா பாகங்களிலும் படும் படி நன்றாக மிக்ஸ் பண்ணி கால் மணி நேரம் வைக்கவும். சீனச்சட்டி அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணை ஊற்றவும். எண்ணை சூடானதும் கிழங்கை போட்டு மீடியம் ஃப்ளேமில் நன்றாக ஃப்ரை பண்ணி எடுக்கவும். சிறிய பேன் அடுப்பில் வைத்து சிறிது எண்ணை ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு பொரித்தெடுத்து கிழங்கில் சேர்க்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சேனைக்கிழங்கு - 1/2 கிலோ
  2. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூண்
  3. மிளகு தூள் - 2 டீஸ்பூண்
  4. பெருஞ்சீரக தூள் - 1 டீஸ்பூண்
  5. பெப்பர் பவுடர் - 1/2 டீஸ்பூண்
  6. கரம் மஸாலா தூள் - 1 டீஸ்பூண்
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூண்
  8. உப்பு தேவைக்கு
  9. கறிவேப்பிலை - 2 தண்டு
  10. பொரிப்பதற்கு எண்ணை

வழிமுறைகள்

  1. 1. சேனைக்கிழங்கை தோல் சீவி முழுசாக கழுகி விட்டு துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. 2.நறுக்கிய கிழங்கில் மேற் கூறிய எல்லா மஸாலாக்களும் உப்பும் சேர்த்து கிழங்கின் எல்லா பாகங்களிலும் மஸாலா படும் படி நன்றாக புரட்டி கால் மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  3. 3.அடுப்பில் ஃப்ரையிங் பேன் வைத்து எண்ணை ஊற்றவும்.
  4. 4. எண்ணை சூடானதும் கிழங்கை போட்டு மீடியம் ஃப்ளேமில் நன்றாக ஃப்ரை பண்ணி எடுக்கவும்.
  5. 5.அந்த பொரித்த எண்ணையில் கறிவேப்பிலையை போட்டு ஃப்ரை பண்ணி கிழங்கின் மீது தூவவும்.
  6. இது மிகவும் சுவையும் மணமும் நிறைந்த உணவு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்