வீடு / சமையல் குறிப்பு / கோழி குருமா

Photo of chicken korma by jassi aarif at BetterButter
2
0
0.0(0)
0

கோழி குருமா

Jan-22-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோழி குருமா செய்முறை பற்றி

கோழி அரை கிலோ தேங்காய் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், தக்காளி, குருமா போடி, பச்சை மிளகாய் ,மிளகாய் பொடி, தயிர்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • பிரெஷர் குக்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. கோழி அரை கிலோ
 2. பெரிய வெங்காயம் ஒன்று
 3. மீடியம் சைஸ் தக்காளி 2
 4. பச்சைமிளகாய்-2
 5. தனி மிளகாய் தூள் 1 ஸ்பூன்
 6. இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
 7. மல்லி புதினா ஒரு கைப்பிடி அளவு
 8. தயிர் கால் டம்ளர்
 9. குருமா பொடி அல்லது கரம்மசாலா 2 ஸ்பூன்
 10. என்னை 3ஸ்பூன்
 11. உப்பு தேவைக்கேற்ப
 12. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
 13. தேங்காய் அரை மூடி மையாக அரைக்க வேண்டும்
 14. குருமா பொடி தயார் செய்வதற்கு தேவையான பொருட்கள் தனியா அரை கிலோ பட்டை மற்றும் கிராம்பு 10 கிராம் ஏலக்காய் 10 கிராம் கசகசா 10 கிராம் அனைத்தையும் வெயிலில் நன்றாக காய வைத்து அரைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்

வழிமுறைகள்

 1. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் எண்ணை காய்ந்தவுடன் பச்சை மிளகாய் போடவும்
 2. பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும் வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்
 3. இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்
 4. மஞ்சள் மற்றும் எலுமிச்சையை போட்டு கழுவிய கோழி துண்டுகளை சேர்க்கவும்
 5. இப்பொழுது கரம் மசாலா அல்லது குருமா போடி சேர்த்து தனி மிளகாய் பொடி மற்றும் உப்பு, மஞ்சள், தூள் சேர்த்து நன்றாக கிளறவும்
 6. மையாக அரைத்து வைத்திருக்கும் அரை மூடி தேங்காயை சேர்க்கவும்
 7. இப்பொழுது தயிரை சேர்த்து மல்லி புதினா இலையை சேர்த்து முக்கால் டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடவும்
 8. 2 அல்லது 3 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
 9. சுவையான காரமான சிக்கன் குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்