வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபுள் மஞ்சூரியன் பாக்ஸ்

Photo of Vegetable Manchurian Box by Jayasakthi Ekambaram at BetterButter
372
1
0.0(0)
0

வெஜிடபுள் மஞ்சூரியன் பாக்ஸ்

Jan-22-2019
Jayasakthi Ekambaram
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபுள் மஞ்சூரியன் பாக்ஸ் செய்முறை பற்றி

மஞ்சூரியன் ஸ்டைலில் காய்கறிகளை வதக்கி ரவையை திரட்டி அதன் உள்ளே வைத்து செய்யும் பாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் 3
  4. கேரட் ஒன்று
  5. சிறிய பச்சை குடைமிளகாய் ஒன்று
  6. பீன்ஸ் 8
  7. பூண்டுப்பற்கள் 8
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன்
  9. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  10. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்
  11. டொமேட்டோ சாஸ் ஒரு டீஸ்பூன்
  12. சோயா சாஸ் ஒரு ஸ்பூன்
  13. சில்லி சாஸ் அரை ஸ்பூன்
  14. சமையல் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ரவையை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. அதில் முக்கால் ஸ்பூன் உப்புத்தூள் 3 ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சாஃப்டாக பிசைந்து கொள்ளவும்
  3. அதை மூடி ஒருபக்கமாக வைத்துவிட்டு ஸ்டஃப்பிங் செய்ய ஆரம்பிக்கவும்
  4. ஸ்டப்ஃபிங் செய்வதற்கு பூண்டுப்பற்கள் பச்சை மிளகாய் வெங்காயம் கேரட் குடைமிளகாய் பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நறுக்கிய வைத்துள்ள காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. மூடி வைத்து 3 நிமிடம் வதக்கி வேக வைக்கவும்
  7. டொமேட்டோ சாஸ் சில்லி சாஸ் சோயா சாஸ் உப்பு தூள் சேர்க்கவும்
  8. காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு எல்லாவற்றையும் சேர்த்து கலந்து வைக்கவும்
  9. 3 ஸ்பூன் மைதா மாவில் 5 ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்றாக பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்
  10. இப்போது மைதா மாவை நீண்ட ஓவல் ஷேப்பில் தேய்த்துக்கொள்ளவும்
  11. ஓரங்களை கட் செய்து நீண்ட செவ்வக வடிவத்தில் வைக்கவும்
  12. நான்கு புறமும் மைதா பேஸ்டை தடவி கொள்ளவும்
  13. ஸ்டஃப்பிங்கை ஒரு ஓரத்தில் வைத்து அதை அப்படியே மடிக்கவும்
  14. மீதி உள்ள செவ்வகத்தில் கோடுகள் குறுக்குவாட்டில் போட்டு திரும்பவும் மேலே போட்டு மடிக்கவும்
  15. இவ்வாறு எல்லா மாவையும் செய்து தட்டில் அடுக்கவும்
  16. அடுப்பில் எண்ணெயை காய வைத்து இந்த பாக்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  17. இப்போது சுவையான மொறுமொறுப்பான வெஜிடபிள் மஞ்சூரியன் பாக்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்