வீடு / சமையல் குறிப்பு / பேபிகார்ன் மஞ்சூரியன்

Photo of Baby corn manjurian by jeyaveni chinniah at BetterButter
308
1
0.0(0)
0

பேபிகார்ன் மஞ்சூரியன்

Jan-23-2019
jeyaveni chinniah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பேபிகார்ன் மஞ்சூரியன் செய்முறை பற்றி

இந்த குளிர் காலத்திற்கு ஏற்ற காரசார ௨ணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பேபி கார்ன் - 1 பாக்கெட்
  2. கோதுமை மாவு-2 டேபிள் ஸ்பூன்
  3. மிளகு தூள் - 2ஸ்பூன்
  4. குடைமிளகாய் - 1/2
  5. சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
  6. கொத்தமல்லி தழை சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. சோயா சாஸ்-1/2 ஸ்பூன்
  9. தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
  10. வெங்காயம் - 1
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
  2. அதனுடன் கோதுமை மாவு, 1 டேபிள் ஸ்பூன் சோளமாவு, 1 ஸ்பூன் மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்துக் கலந்து கொள்ளவும்
  3. 5 நிமிடம் ஊற வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஊற வைத்த பேபிகார்னை மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும்
  5. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. உப்பு, பெரியதாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  7. சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும்
  8. மீதமுள்ள சோளமாவில் தண்ணீர் சேர்த்து கலக்கி ஊற்றவும்
  9. நன்றாக கிளறவும்
  10. பின்பு பொரித்த பேபி கார்ன் சேர்த்து கிளறவும்
  11. மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்