வீடு / சமையல் குறிப்பு / கார பணியாரம் , தேங்காய் சட்னி

Photo of spicy paniyaram with coconut chutney by jassi aarif at BetterButter
440
0
0.0(0)
0

கார பணியாரம் , தேங்காய் சட்னி

Jan-23-2019
jassi aarif
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார பணியாரம் , தேங்காய் சட்னி செய்முறை பற்றி

தேவையானவை தோசை மாவு கடலை பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை மல்லித்தழை மஞ்சள்தூள் தனியா பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு ஐஸ்கிரீம் பவுலில் 5 பவுல்
  2. கடலைப்பருப்பு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் அரை டம்ளர்
  3. பெரிய வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கியது
  4. தனி மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. தேங்காய் சட்னிக்கு தேங்காய் அரை மூடி சிறிது கறிவேப்பிலை சிறிது மல்லித்தழை சிறிது பொட்டுகடலை உப்பு தேவைக்கேற்ப ஒரு பூண்டு பல் அனைத்தும் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்

வழிமுறைகள்

  1. தோசை மாவில் ஊறிய கடலைப்பருப்பை கலக்கவும்
  2. பின்னர் உப்பு ,மஞ்சள் தூள், தனி மிளகாய் பொடி ,பொடியாக நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் போட்டு கலக்கவும்
  3. அடுப்பில் பணியார சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்
  4. எல்லாம் போட்டு கலந்து வைத்திருக்கும் தோசை மாவை எடுத்து பணியார சட்டியில் ஒரு குழிகரண்டி ஊற்றவும்
  5. மிதமான தீயில் வைத்து வேக விடவும், முக்கால் பதம் வெந்ததும் பணியாரத்தை திருப்பி விடவும்
  6. சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு பணியாரத்தை எடுத்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்