வீடு / சமையல் குறிப்பு / வத்தக்குழம்பு

Photo of Vatthakkulambu by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
328
1
0.0(0)
0

வத்தக்குழம்பு

Jan-24-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வத்தக்குழம்பு செய்முறை பற்றி

இதில் புளிப்பு காரம் தூக்கலாகவும் இனிப்பு கசப்பு பாதியளவும் நல்லது ஒருவாரவரை வைத்துசாப்பிடலாம் வயிற்றுபூச்சி கொல்லும் வயிற்றுபொறுமல் நீங்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சின்னவெங்காயம் 100கிராம்
  2. பூண்டு 100கிராம்
  3. பச்சை மிளகாய் 5
  4. தக்காளி 50கிராம்
  5. கருவேப்பிலை
  6. மணத்தக்காளி வத்தல் 2ஸ்பூண்
  7. தேங்காய் சிறிது
  8. நல்லெண்ணைய் 100Ml
  9. கடுகு உளுந்து 1ஸ்பூண்
  10. வெந்தயம் 1/2ஸ்பூண்
  11. குழம்பு மசால் பொடி 50கிராம்
  12. சாம்பார் பொடி1/2ஸ்பூன்
  13. மிளகு 1ஸ்பூன்
  14. புளி50கிராம்
  15. வெல்லம் சிறிது
  16. உப்பு

வழிமுறைகள்

  1. பூண்டு வெங்காயம் உறித்து வைக்கவும் பச்சை மிளகாய் கீறிவைக்கவும் தேங்காய் பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. புளியை ஊறவைத்து கரைத்துவைக்கவும் தக்காளியை மிக்சியில் அரைத்து வைக்கவும்
  3. இரும்பு சட்டியில் நல்லெண்ணைய் விட்டு காய்ந்ததும் கடுகுஉளுந்து வெந்தயம் போட்டு பொரிந்ததும் கருவேப்பிலை மிளகு தேங்காய் மணத்தக்காளி வத்தல் போடவும் அத்துடன் பூண்டு வெங்காயம் எண்ணையில் வேகவிடவும்
  4. வேகும் வாசனை வரும் அப்போது தக்காளி சாறு உப்பு சேர்க்கவும் அப்போது குழம்பு பொடி சாம்பார் பொடி போடவும் புளிக்கரைசலைசேர்த்து கொதிக்கவிட்டு தீயை சிறுத்துவ வைக்கவும்
  5. வெல்லத்தை சேர்த்து கொதித்து எண்ணைய் பிரிந்து வரும்போது இறக்கவும் கமகம வத்தக்குழம்பு தயார்
  6. இட்டலி சாதத்துடன் அல்லும் தயிர்சாதத்துக்கு தொட்டுக்க தூக்கல்
  7. ப்ரிட்ச்சில் வைத்தும் பயன்படுத்தலாம் அல்லது சூடுசெய்தும் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்