வீடு / சமையல் குறிப்பு / வாணியம்பாடி அப்பளம் காரக்குழம்பு

Photo of VaniyamBadi Appalam/Pappadam Curry by Aishwarya Rangan at BetterButter
890
1
0.0(0)
0

வாணியம்பாடி அப்பளம் காரக்குழம்பு

Jan-24-2019
Aishwarya Rangan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாணியம்பாடி அப்பளம் காரக்குழம்பு செய்முறை பற்றி

எப்போதும் காய்கறிகள் மட்டுமே சேர்த்து காரக்குழம்பு செய்யாமல் புதிதாக அப்பளம் சேர்த்து கார குழம்பு செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி சிறிய எலுமிச்சை பழம் அளவு
  2. பொரித்த அப்பளம் 3
  3. சிறிய வெங்காயம் 12
  4. தக்காளி 1
  5. கறிவேப்பிலை
  6. பெருங்காயம்
  7. காய்ந்த மிளகாய் 2
  8. நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. குழம்பு மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. வேர்க்கடலை 1/4 கப்
  13. அரிசி மாவு 1 ஸ்பூன்
  14. கொத்தமல்லி சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. மூன்று அப்பளம் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  3. சிறிய வெங்காயம், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை ஒரு தக்காளி எடுத்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும் பிறகு 1/4 டீஸ்பூன் கடுகு 1/4 டீஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும்
  5. காய்ந்த மிளகாய் 2 கறிவேப்பிலை சிறிய வெங்காயம் 12 சேர்த்து வதக்கவும்
  6. வெங்காயம் நன்றாக வதங்கிய பின் ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும் புளிக் குழம்பில் புளி சேர்ப்பதால் தக்காளி ஒன்று போட்டால் போதுமானது
  7. தக்காளி நன்றாக வதங்கிய பின் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 3 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  8. அப்போது புளித்தண்ணீரை சேர்த்து கொள்ளவும்
  9. ஒரு ஸ்பூன் அரிசி மாவு அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  10. அரிசி மாவு சேர்த்தால் குழம்பு இன்னும் திக்காக வரும், 10 நிமிடம் மூடி வைத்து விடவும்
  11. குழம்பு வெந்தவுடன் அப்பளம் அதில் சேர்த்துக் கொள்ளவும்
  12. சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும் இப்போது மிகவும் புளிப்பான காரமான வாணியம்பாடி ஸ்டைல் அப்பளம் குழம்பு தயார்
  13. கேரட் கூட்டு அல்லது கோஸ் கூட்டு அருமையான காம்பினேஷன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்