வீடு / சமையல் குறிப்பு / காரசாரமான திராட்சை விருந்து

Photo of Spicy grapes treat by Abinaya bala at BetterButter
158
3
0.0(0)
0

காரசாரமான திராட்சை விருந்து

Jan-25-2019
Abinaya bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காரசாரமான திராட்சை விருந்து செய்முறை பற்றி

பச்சை திராட்சை மூலமாக செய்யப்படும் உணவு வகைகள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. திராட்சை ஊறுகாய் செய்ய
  2. வெட்டி வைத்த திராட்சை ஒரு கப்
  3. பொடி வெந்தயப் பொடி மிளகாய்த்தூள் தலா ஒரு டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் சிறிதளவு
  5. வெங்காயத்தாள் சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. தாளிக்க எண்ணெய் கடுகு கருவேப்பிலை
  8. திராட்சை உருளை வறுவல் செய்ய
  9. வெட்டி வைத்த திராட்சை அரை கப்
  10. வேக வைத்து வெட்டி வைத்த உருளைக்கிழங்கு 5
  11. பெருங்காயம் மஞ்சள் தூள் சிறிதளவு
  12. காஷ்மீரி மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. தாளிக்க சோம்பு கறிவேப்பிலை எண்ணெய்
  15. திராட்சை பிரியாணி செய்ய
  16. வெட்டி வைத்த திராட்சை ஒரு கப்
  17. வெங்காயம்-2
  18. தக்காளி-3
  19. அரிசி 2 ஆழாக்கு
  20. பச்சைமிளகாய்-2
  21. உப்பு தேவையான அளவு
  22. நெய் 3 டீஸ்பூன்
  23. அன்னாசிப் பூ பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி பருப்பு பிரிஞ்சி இலை சோம்பு தாளிக்க
  24. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  25. கரம் மசாலா தூள் 2 டீஸ்பூன்
  26. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  27. பிரியாணி மசாலா 4 டீஸ்பூன்
  28. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. திராட்சை ஊறுகாய் செய்ய முதலில் எண்ணெயில் கடுகு கருவேப்பிலை திராட்சை சேர்த்து வதக்கவும்
  2. பின் உப்பு சிறிது மஞ்சள் தூள் சிறிது மிளகாய் தூள் மற்றும் வெந்தய பொடி கடுகு பொடி பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. திராட்சை நன்கு சுருண்டு எண்ணெய் வெளிவரும் வரை நன்கு வதக்கி சுவையான திராட்சை ஊறுகாய் ரெடி
  4. திராட்சை பிரியாணி செய்ய குக்கரில் நெய் விட்டு கரம் மசாலா பொருட்கள் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின்னர் வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் வெட்டி வைத்த திராட்சை உப்பு மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் பிரியாணி மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பின்னர் அரிசி அரிசிக்கு தேவையான நீர் மற்றும் புதினா கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  8. 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான திராட்சை பிரியாணி ரெடி
  9. திராட்சை உருளை வறுவல் செய்ய முதலில் வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் வேகவைத்து வெட்டி வைத்த உருளைக்கிழங்கை நன்றாக வதக்கவும்
  10. பின்னர் வெட்டி வைத்த திராட்சை உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  11. 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்
  12. காரமான உருளை திராட்சை வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்