வீடு / சமையல் குறிப்பு / " அவிச்சு பொரிச்ச முட்டை"
" Boiled egg fry " ( அவித்து பொரித்த முட்டை) தேவையான பொருட்கள் அவித்த முட்டை - 6 மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண் மிளகு பொடி - 1 டேபிள் ஸ்பூண் பெருஞ்சீரகப் பொடி - 1 டீஸ்பூண் நல்ல மிளகு தூள் - 1/2 டீஸ்பூண் கரம் மஸாலா பொடி - 1/2 டீ ஸ்பூண் உப்பு தேவைக்கு பொரிப்பதற்கு எண்ணை. கறிவேப்பிலை - 1 தண்டு செய் முறை அவித்த முட்டையை கத்தி வைத்து எல்லா பாகமும் கீறிக் கொடுக்கவும்.. ஒரு தட்டில் மேற்கூறிய எல்லா மஸாலா பொடிகளும், உப்பும், லெமனன் ஜுஸும்,சிறிது தண்ணீரும் சேர்த்துக் குழைக்கவும். குழைத்த இந்த மஸாலாவை ஒவ்வொரு முட்டையையும் எடுத்து அதன் கீறிய பாகங்களிலும், முட்டையிலும் நன்றாக புரட்டவும். எல்லா முட்டைகளிலும் மஸாலா நன்றாக தடவி பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். பத்து நிமிடம் கழித்து ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி எண்ணை சூடானதும் முட்டையை ஓவ்வொன்றாக வைக்கவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போடவும். இப்படி எல்லா பாகமும் திருப்பி திருப்பி போட்டு முட்டையை நன்றாக ஃப்ரை செய்து எடுக்கவும். கறிவேப்பிலை பொரித்து தூவவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க