வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பெப்பர் பீப் பீட்சா

Photo of Spicy pepper beef pizza by Sumaiya Arafath at BetterButter
255
1
0.0(0)
0

ஸ்பைசி பெப்பர் பீப் பீட்சா

Jan-26-2019
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பெப்பர் பீப் பீட்சா செய்முறை பற்றி

இந்த நல்லமிளகு பீட்சா மிகவும் காரமாகவும் சீஸியாகவும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிஸா பேஸ் செய்ய:
  2. மைதா 2 கப்
  3. ஈஸ்ட் 1 தே.க
  4. பேக்கிங் தூள் 1சிட்டிகை
  5. உப்பு தேவைக்கு
  6. சர்க்கரை 1 தே.க
  7. பால் 1/2 கப்
  8. எண்ணை 2 தே.க
  9. நல்லமிளகு சிக்கன் செய்ய:
  10. பீப் இறைச்சி 200 கிராம்
  11. ந.மிளகு 1 &1/2 தே.க
  12. இ.பூண்டு விழுது 1/4 தே.க
  13. கரம் மசாலா 1/4 தே.க
  14. நறுக்கிய கறிவேப்பிலை 1 மே.க
  15. எண்ணை 1 மே.க
  16. மல்லி தூள் 1/4 தே.க
  17. பெருஞ்சீரகதூள் 1/4;தே.க
  18. உப்பு தேவைக்கு
  19. வெங்காயம் நறுக்கியது 1/4 கப்
  20. குடைமிளகாய் நறுக்கியது 1/4 கப்
  21. சாத்தர் கலவை 2 மே.க
  22. மொசரல்லா சீஸ் 200 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் ஈஸ்ட் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும்
  2. ஈஸ்ட் ஆக்டிவேட் ஆன பிறகு மைதா மாவு ,உப்பு ,ஈஸ்ட் கலவை ,பேக்கிங் தூள், எண்ணை தேவைக்கு வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்றாக பிசையவும்
  3. இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்
  4. மாவு இரண்டு மடங்காக பொங்கி வந்த பிறகு பிசைந்து அதை உருண்டைகளாக உருட்டி பரத்தி சிறிது நேரம் வைக்கவும்
  5. பின்னர் அதில் போர்க் வைத்து ஓட்டைகள் போடவும்
  6. அதை சுட்டெடுக்கவும்
  7. பூரணம் செய்ய;
  8. இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  9. பிறகு மசாலாக்கள் இஞ்சி பூண்டு விழுது,கறிவேப்பிலை சேர்த்து வைக்கவும்
  10. வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெங்காயம் வதக்கவும்
  11. இறைச்சியை நன்றாக வேக வைக்கவும்
  12. தண்ணீர் வற்றியதும் குடை மிளகாய் போட்டு வதக்கவும்
  13. ஒரு பீட்சா பேஸ எடுத்து அதில் கெட்சப் தடவவும்
  14. துருவிய சீஸ் போட்டு பீப் கலவை போடவும்.
  15. அதன் மேலே மொசரல்லா சீஸ் போடவும்
  16. பிறகு சாத்தர் கலவையை மேலே தூவவும்
  17. சூடுபடுத்தப்பட்ட ஓமனில் 180 டிகிரி வெப்பத்தில் சீஸ் உருகும் வரை பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்