வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பூண்டு தொக்கு

Photo of Onion garlic thokku by sudha rani at BetterButter
584
0
0.0(0)
0

வெங்காய பூண்டு தொக்கு

Jan-26-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
85 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பூண்டு தொக்கு செய்முறை பற்றி

இட்லி தோசை சப்பாத்தி மற்றும் லெமன் சாதம் புளி சாதம் போன்ற சாத வகைகளுக்கும் ஏற்ற காரசாரமான புளிப்பான தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. சின்ன வெங்காயம் 1 கிலோ
  2. பூண்டு 1/2 கிலோ
  3. வரமிளகாய் 25
  4. புளி 200 கிராம்
  5. வெல்லம் 2 டேபிள்ஸ்பூன்
  6. கடுகு 2 ஸ்பூன்
  7. நல்லெண்ணெய் 1/2 லிட்டர்
  8. கல் உப்பு தேவையான அளவு
  9. வறுத்து பொடிக்க:
  10. வெந்தயம் 2 ஸ்பூன்
  11. சீரகம் 1 ஸ்பூன்
  12. மல்லி விதை 1 ஸ்பூன்
  13. பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
  14. கடுகு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து வைக்கவும்
  2. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும்
  4. பின் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் மற்றும் புளி சேர்த்து வதக்கவும்
  5. பின் இதை ஆறவிட்டு நன்கு அரைத்து எடுக்கவும்
  6. பின் மீண்டும் வாணலியில்(இரும்பு கடாயில்) எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  7. மிகவும் மெல்லிய தீயில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  8. ஓரங்களில் நன்கு எண்ணெய் பிரிந்து வரும் போது வறுத்து பொடித்த பொடி மற்றும் வெல்லம் சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  9. நன்கு எண்ணெய் பிரிந்து மணம் வரும் போது இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்