வீடு / சமையல் குறிப்பு / தக்காளி ரசம்

Photo of Tomoto rasam by sudha rani at BetterButter
467
0
0.0(0)
0

தக்காளி ரசம்

Jan-26-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி ரசம் செய்முறை பற்றி

புளிப்பு சுவையுள்ள ருசியான ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 8
  2. பூண்டு 6 பல்
  3. எண்ணெய் 4 ஸ்பூன்
  4. கடுகு 1 ஸ்பூன்
  5. சீரகம் 2 ஸ்பூன்
  6. மிளகு 2 ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  8. வரமிளகாய் 4
  9. கறிவேப்பிலை சிறிது
  10. கொத்தமல்லி தழை சிறிது
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தக்காளியை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு எடுக்கவும்
  2. பின் மிக்ஸியில் போட்டு அரைத்து நன்கு வடிகட்டி வைக்கவும்
  3. பூண்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
  4. சீரகம் மிளகு வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. பின் பொடித்த பொடியை சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பின் வடிகட்டிய தக்காளி சாறு மற்றும் தேவையான அளவு உப்பு தண்ணீர் ஊற்றி மல்லித்தழை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  8. கொதிக்கும் முன் நுரைத்து வரும் போது இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்