வீடு / சமையல் குறிப்பு / தஹி சிக்கன்

Photo of DAHI CHICKEN by Munsila Fathima at BetterButter
200
0
0.0(0)
0

தஹி சிக்கன்

Jan-26-2019
Munsila Fathima
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தஹி சிக்கன் செய்முறை பற்றி

சூடான சாதத்திற்கு ஏற்ற சைடு டிஷ். ரெசிபி எனது நாவின் சுவைக்கு ஏற்ப காரசாரமாக சுலபமாக செய்ய பிரஷர் குக்கரில் செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் 300 கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்றில் பாதி
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. சிவப்பு மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  6. தயிர் ஒரு கப்(160gm)
  7. உப்பு தேவைக்கு
  8. எண்ணெய் தேவைக்கு
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  10. சிக்கன் கபாப் மசாலா ஒன்றரை மேசைக்கரண்டி
  11. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடித்துக் கொள்ளுங்கள்
  2. குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயத்தை அதிக நேரம் வதக்க தேவையில்லை
  4. அதனுடன் உப்பு தக்காளி இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்
  5. சிக்கன் துண்டுகள் மற்றும் தயிர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
  6. வேக வைத்த சிக்கனை விசில் போனதும் கடாயில் மாற்ற வேண்டும்.
  7. அதிக நெருப்பு வைத்து க்ரேவி வற்றி வரும் போது கபாப் மசாலா சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்
  8. க்ராவியாக வேண்டும் என்பவர்கள் கடாயில் மாற்றியதும் கபாப் மசாலா தூவி 2 நிமிடம் பிரட்டி அடுப்பை அணைக்கவும்
  9. ட்ரையாக விரும்புவர்கள் க்ரேவி வற்றி வரும்போது மசாலாவை சேர்த்து பிரட்டவும்.
  10. இறுதியில் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்