வீடு / சமையல் குறிப்பு / பூண்டு குழம்பு

Photo of Garlic grevi by sudha rani at BetterButter
403
0
0.0(0)
0

பூண்டு குழம்பு

Jan-27-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பூண்டு குழம்பு செய்முறை பற்றி

கார சாரமான பூண்டு மணத்துடன் பசியை தூண்டும் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பூண்டு 1/4 கிலோ
  2. நல்லெண்ணெய் 1/2 கப்
  3. கறிவேப்பிலை சிறிது
  4. கொத்தமல்லி தழை சிறிது
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. புளிக்கரைசல் 1 கப்
  7. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  8. சீரகத்தூள் 2 ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  11. வரமிளகாய் 3
  12. உப்பு தேவையான அளவு
  13. மசாலா அரைக்க:
  14. தேங்காய் துருவல் 1 மூடி
  15. சின்ன வெங்காயம் 1 கப்
  16. தக்காளி 3
  17. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. பூண்டை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
  2. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வதக்கி பின் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பூண்டு நன்கு சிவந்து வந்ததும் கொடுத்துள்ள மசாலா தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் புளிக்கரைசல் விட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  7. பின் அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  8. நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்