வீடு / சமையல் குறிப்பு / மீன் ஷவர்மா

Photo of Fish shawarma by kifa aboo at BetterButter
816
1
0.0(0)
0

மீன் ஷவர்மா

Jan-27-2019
kifa aboo
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மீன் ஷவர்மா செய்முறை பற்றி

ரூசியோ ரூசி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வஞ்சரம் மீன் அரை கிலோ
  2. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  5. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  6. மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
  7. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  8. சாட் மசாலா ஒரு டீஸ்பூன்
  9. ஆயில் 2 டேபிள்ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் ஒன்று
  11. கொத்தமல்லி இலை சிறிதளவு
  12. கறிவேப்பிலை சிறிதளவு
  13. மைதா 300 கிராம்
  14. ஈஸ்ட் ஒரு டீஸ்பூன்
  15. உப்பு ஒரு டீஸ்பூன்
  16. சர்க்கரை ஒரு டீஸ்பூன்
  17. தண்ணீர் ஒரு கப்
  18. முட்டை கோஸ் ஒரு கப்
  19. தக்காளி ஒரு கப்
  20. துருவிய கேரட் ஒரு கப்
  21. நீளமாக கட் பண்ணினா குடைமிளகாய் ஒரு கப்
  22. வினிகர் ஒரு மூடி

வழிமுறைகள்

  1. சவர்மா பிரட் செய்ய தேவையான பொருட்கள்
  2. மைதா 300 கிராம்
  3. ட்ரை ஈஸ்ட் ஒரு டீஸ்பூன்
  4. சர்க்கரை ஒரு டீஸ்பூன்
  5. சால்ட் ஆப் டீஸ்பூன்
  6. வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு கப்
  7. ஆயில் 2 டேபிள்ஸ்பூன்
  8. பிரட் செய்முறை
  9. முதலில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட் ,சர்க்கரை, உப்பு போட்டு மிக்ஸ் பண்ணி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
  10. பிறகு அதை மைதா மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு பிசையும் பதம் பிசைந்து எடுத்து வைக்க வேண்டும்
  11. அதை ஒரு மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும்
  12. பிறகு அந்த மாவை எடுத்து நன்கு பிசைந்து மறுபடியும் மூடி வைக்க வேண்டும்
  13. அரை மணி நேரம் கழித்து அதை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி மாவு விடுவது போல் விட்டு அதை தவ்வாவில் சுட்டு எடுக்க வேண்டும்
  14. இப்போது சவர்மா பிரட் ரெடி
  15. ஃபிஷ் பில்லிங் செய்முறை
  16. மீனுடன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து அதை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  17. அதை உதிரி உதிரியாக உதிர்த்து விட்டு அதனுடன் மிளகாய்த்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள்
  18. கரம் மசாலா சாட் மசாலா உப்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கிய இஞ்சி கறிவேப்பிலை போட்டு நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக தட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  19. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தட்டி வைத்த மீன் கட்லெட்டை சேலவ் ஃப்ரை பண்ணி எடுக்க வேண்டும்
  20. மற்றொரு பாத்திரத்தில் நீளமாக கட் பண்ணின கோஸ் கேரட் குடைமிளகாய் வினிகர் உப்பு தக்காளி சேர்த்து மிக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்
  21. இந்தக் கலவையுடன் மயோனைஸ் அல்லது பூண்டு சாஸ் வினிகர் உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணி வைக்க வேண்டும்
  22. இப்போது பிரெட்டின் மேல் டொமேடோ கெட்சப், மயோனைஸ், சேலட், மீன் கட்லட் வைத்து ரோல் பண்ணி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  23. இப்போது சுவையான மீன் சவர்மா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்