வீடு / சமையல் குறிப்பு / காரமான மட்டன் உருளை குழம்பு

Photo of spicy mutton potato curry by Baby SiMr at BetterButter
433
0
0.0(0)
0

காரமான மட்டன் உருளை குழம்பு

Jan-28-2019
Baby SiMr
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரமான மட்டன் உருளை குழம்பு செய்முறை பற்றி

எளிமையான முறையில் செய்யப்பட்ட காரமான குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன்-1/2கிலோ
  2. உருளை கிழங்கு-2
  3. தயிர்-1/2 கப்
  4. இஞ்சிபூண்டு விழுது-2தேக
  5. வெங்காயம்-3
  6. தக்காளி-2
  7. பச்சை மிளகாய்-2
  8. வத்தல் பொடி-2 தேக
  9. கறி மசாலா பொடி-3 மேக
  10. தண்ணீர்-1.5 கப்
  11. முதல் தேங்காய் பால்-1/2கப்
  12. கரம் மசாலா-1 தேக
  13. இஞ்சிபூண்டு சதைத்தது-1மேக
  14. உப்பு
  15. எண்ணெய்

வழிமுறைகள்

  1. மட்டனை நன்கு சுத்தம் செய்து அதில் இஞ்சிபூண்டு விழுது உப்பு தயிர் சேர்த்து 10 நிமிடம்ஊற வைக்க வேண்டும்
  2. பின் ப்ரஷர் குக்கரில், எண்ணெய் ஊற்றி சூடானதும் கரம் மசாலா பொடி மற்றும் வெங்காயம் சேர்க்கவும்
  3. வெங்காயம் வதங்கி பொன்னிறமானதும் சதைத்த இஞ்சிபூண்டு சேர்க்கவும்
  4. பின் தக்காளி மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்
  5. நன்கு வதக்கி எண்ணெய் மிதக்க தொடங்கும் போது கறி மசாலா மற்றும் மட்டன் கலவை சேர்க்கவும்
  6. மட்டனிலிருந்து தண்ணீர் இறங்கும் வரை வதக்கவும்
  7. பின் தேவைக்கு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து 5 விசில் வரவேண்டும்
  8. கடைசியில் தேங்காய் பால் மற்றும் உருளை கிழங்கு சேர்த்து கிழங்கு நன்கு வெந்ததும் இறக்கவும்
  9. மல்லியிலை தூவி அலங்கரித்தால் சுவையான காரமான மட்டன் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்