வீடு / சமையல் குறிப்பு / மொச்சை, நெத்திலி கருவாட்டு குழம்பு

Photo of Dry fish kulampu by Shoba Jaivin at BetterButter
600
0
0.0(0)
0

மொச்சை, நெத்திலி கருவாட்டு குழம்பு

Jan-28-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மொச்சை, நெத்திலி கருவாட்டு குழம்பு செய்முறை பற்றி

மொச்சை, நெத்திலி கருவாட்டு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நெத்திலி கருவாடு 200 கிராம்
  2. கத்தரிக்காய் நாலு
  3. முருங்கைக்காய் 1
  4. மொச்சை 50 கிராம்
  5. புளி ஒரு சிறு துண்டு
  6. தேங்காய் அரை மூடி
  7. பூண்டு 10
  8. சீரகம் வெந்தயம் தலா ஒரு ஸ்கூல்
  9. பச்சை மிளகாய் 4
  10. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  11. மிளகாய் தூள் தனியா தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  12. சின்ன வெங்காயம் 20
  13. தக்காளி-2

வழிமுறைகள்

  1. மொச்சையை முதல் நாள் இரவே ஊற விட்டு குக்கரில் 5 விசில் வேகவிடவும்
  2. பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் தாளிக்கவும்
  3. வெந்தயம் நன்கு பொரிந்ததும் கருவேப்பிலை வெங்காயம் தக்காளி விழுது உப்பு சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி நன்கு மசிந்ததும் மசாலா பொருட்களை சேர்க்கவும்
  5. கத்தரிக்காய் முருங்கைக்காய் மற்றும் கருவாடு சேர்த்து வதக்கவும்
  6. மிக்ஸியில் தேங்காய் சீரகம் பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  7. புளித்தண்ணீர் மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  8. பத்து நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்
  9. முருங்கைக்காய் கத்தரிக்காய் கருவாடு நன்கு வேகும் வரை வேக விட்டு கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்
  10. காரசாரமான நெத்திலி கருவாட்டு குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்