BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ராகி தக்காளி நாச்சோ சிப்ஸ் வித் சில்லி சீஸ் டிப்

Photo of Ragi Tomato Nacho Chips with Chilli Cheese Dip by Sowmya Sundar at BetterButter
0
1
0(0)
0

ராகி தக்காளி நாச்சோ சிப்ஸ் வித் சில்லி சீஸ் டிப்

Jan-28-2019
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி தக்காளி நாச்சோ சிப்ஸ் வித் சில்லி சீஸ் டிப் செய்முறை பற்றி

இது ஒரு ஃப்யூசன் முயற்சி. ராகி மாவுடன் தக்காளி ,மிளகாய் தூள் சேர்த்து செய்த டாங்கி நாச்சோ சிப்ஸ். அதற்கு தொட்டுக்கொள்ள சில்லி சீஸ் டிப்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • కలయిక
  • మిళితం
  • వేయించేవి
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நாட்சோ சிப்ஸ் செய்ய :
  2. தக்காளி இரண்டு
  3. ராகி மாவு ஒரு கப்
  4. அரிசிமாவு ரெண்டு டேபிள் ஸ்பூன்
  5. கோதுமை மாவு ரெண்டு டேபிள்ஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  9. எண்ணெய் - டீப் ப்ரை செய்ய
  10. சில்லி சீஸ் டிப் செய்ய:
  11. சீஸ் அரை கப்
  12. பால் 1 டேபிள் ஸ்பூன்
  13. சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ராகி மாவு ,அரிசி மாவு ,கோதுமை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் தக்காளி ,மிளகாய் தூள், உப்பு ,கரம் மசாலா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. மாவுடன் அரைத்த விழுதை சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். தண்ணீர் விட தேவையில்லை.
  4. இந்த மாவை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  5. மாவை உருண்டைகளாக உருட்டி லேசாக திரட்டி கொள்ளவும்.அதை சதுரமாக கட் செய்து பின்அதில் முக்கோண வடிவில் கத்தியால் கட் செய்து கொள்ளவும். முள் கரண்டியால் எல்லா இடங்களிலும் குத்தி விடவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிப்ஸை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. சில்லி சீஸ் டிப் செய்வதற்கு முதலில் பால் மற்றும் சீஸ் சேர்த்து லேசா௧ உருக விட்டு பின் அதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். சீஸில் உப்பு இருப்பதால் தேவைபட்டால் மட்டும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  8. மொறு மொறுப்பான டாங்கி ராகி நாச்சோ சிப்ஸ் மற்றும் சில்லி சீஸ் டிப் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்