Photo of Rasavada by Sarojam Arumugam at BetterButter
170
1
0.0(0)
0

ரசவடை

Jan-28-2019
Sarojam Arumugam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரசவடை செய்முறை பற்றி

மீதம் அந்த பருப்பு வடை ரசத்தில் போட்டால் சூப்பர் ரசவடை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டாணி பருப்பு ஒரு கப்
  2. பச்சை மிளகாய் ஒன்று
  3. வெங்காயம் சிறிதாக நறுக்கியது 1
  4. மிளகாய் வத்தல் 3
  5. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. காயம் கால் தேக்கரண்டி
  9. தேங்காய் எண்ணை மறுப்பதற்காக
  10. தக்காளி-2
  11. புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
  12. மிளகு 2 மேசை கரண்டி
  13. மல்லி விதை 2 மேசைக்கரண்டி
  14. சீரகம் 2 தேக்கரண்டி
  15. வெள்ளைப்பூண்டு 10
  16. சின்ன வெங்காயம் 10 பொடியாக நறுக்கியது
  17. கடுகு ஒரு தேக்கரண்டி
  18. குத்து பருப்பு ஒரு தேக்கரண்டி
  19. மல்லி இலை நறுக்கியது 3 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பட்டாணி பருப்பை அரை மணி நேரம் ஊற போடவும்
  2. ஊரினதும் அத்துடன் ஒரு பச்சை மிளகாய் இஞ்சி துண்டு கறிவேப்பிலை போட்டுஅரைத்து கொள்ளவும்
  3. உப்பு காயப்பொடி மிளகாய் வத்தல் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்
  4. கடாயில் எண்ணெயை சூடாக்கி வரை வறுத்துக் கொள்ளவும்
  5. அதே கடாயில் எண்ணை மாற்றி கடுகு குத்து பருப்பு போட்டு வறுத்து கொள்ளவும்
  6. அத்துடன் சிறு வெங்காயம் நறுக்கியது சேர்த்து வதக்கவும்.
  7. வதங்கினதும் அதோடு புளி கரைசல் தக்காளி சேர்த்து வேக வைக்கவும்
  8. ஒரு மிக்ஸியில் மிளகு மல்லி விதை சீரகம் பூண்டு சேர்த்து அரைக்கவும்
  9. அரைத்த கூட்டை வேகவைத்த தக்காளியுடன் சேர்க்கவும்
  10. 5 கிளாஸ் தண்ணீர் ஊற்றி லேசாக கொதிக்க வைக்கவும்
  11. மல்லி இலை தூவி வருத்த வடை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  12. ஊரினதும் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்