வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கோலா உருண்டை

Photo of Chicken gola bals by sudha rani at BetterButter
231
0
0.0(0)
0

சிக்கன் கோலா உருண்டை

Jan-28-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கோலா உருண்டை செய்முறை பற்றி

சுவையான சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிக்கன் 1 கிலோ
  2. வெங்காயம் 4
  3. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  4. பொட்டுக்கடலை பொடி 4 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிக்க:
  7. முட்டை 2
  8. ப்ரெட் க்ரம்ஸ் தேவையான அளவு
  9. வறுத்து அரைக்க:
  10. பட்டை 2
  11. கிராம்பு 2
  12. ஏலக்காய் 2
  13. பிரியாணி இலை 2
  14. சோம்பு 2 ஸ்பூன்
  15. சீரகம் 2 ஸ்பூன்
  16. மிளகு 1 ஸ்பூன்
  17. வரமிளகாய் 6
  18. கொப்பரை தேங்காய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கன்னை வேகவைத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
  2. வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
  3. அதனுடன் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை உப்பு சேர்க்கவும்
  4. பின் அரைத்த விழுது மற்றும் பொட்டுக்கடலை மாவை பரவலாக தூவி நன்கு பிசைந்து கொள்ளவும்
  5. பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  6. முட்டையை நன்கு அடித்து கலந்து வைக்கவும்
  7. உருண்டைகளை முட்டை கலவையில் முக்கி எடுத்து ப்ரட் க்ரம்ஸில் புரட்டி தட்டில் வைக்கவும்
  8. பின் அதை பிரிட்ஜ் ல் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்
  9. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  10. மிகவும் கரகரப்பாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்