வீடு / சமையல் குறிப்பு / காலிபிளவர் மஞ்சூரியன்

283
0
0.0(0)
0

காலிபிளவர் மஞ்சூரியன்

Jan-28-2019
sivagami manimaran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காலிபிளவர் மஞ்சூரியன் செய்முறை பற்றி

காலிஃப்ளவர் மஞ்சூரியன் சைனீஸ் உணவு வகை. சீனாவிலிருந்து கல்கத்தாவிற்கு வந்து தங்கிய மக்கள் இந்திய மற்றும் சீன உணவு முறைகளை கலந்து உருவாக்கியதே காலிபிளவர் மஞ்சூரியன். காலிபிளவர் மஞ்சூரியன் தற்பொழுது இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு வகை.

செய்முறை டாக்ஸ்

  • சைனீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காலிபிளவர் 1
  2. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  3. மைதா மாவு – ¼ கப்
  4. சோள மாவு – ¼ கப்
  5. சிவப்பு மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
  6. கரம் மசாலா தூள் – ¼ தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  9. எண்ணெய் – 1 தேக்கரண்டி
  10. பூண்டு பற்கள் – 8
  11. குடைமிளகாய் – 1 ( சிறு சதுரங்களாக நறுக்கி யது)
  12. பெரிய வெங்காயம் – ¼ பகுதி ( சிறிய சதுரங்களாக நறுக்கியது)
  13. வெங்காயத்தாள் சிறிதளவு
  14. டொமேட்டோ கெட்சப் – 2 தேக்கரண்டி
  15. சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
  16. சர்க்கரை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முன் தயாரிப்பு காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தண்ணீரை மிதமாக சுட வைத்து அதில் ஒரு தேக்கரண்டி உப்பு மற்றும் காலிபிளவரை சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணைத்து விடவும். அதனை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
  2. செய்முறை 1. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதனை சூடாக்கவும்.
  3. 2. அது சூடாவதற்குள் மைதா மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ஆகியவற்றை கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
  4. 3. காலிஃப்ளவர் துண்டுகளை மாவில் முக்கி சூடான எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  5. 4. பின்னர் ஒரு அகன்ற வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  6. 5. பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து வறுக்கவும்.
  7. 6. சதுரமாக வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  8. 7. அதனுடன் டொமேட்டோ கெட்சப் , சோயா சாஸ், உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை கலந்து கொதிக்க விடவும்.
  9. 8. அதனுடன் வறுத்து வைத்த காலிஃப்ளவர் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்குப் பின் அடுப்பை அணைத்து விடவும்.
  10. 9. பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்