வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton biryani by sudha rani at BetterButter
1113
0
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Jan-28-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

கார சாரமா ஒரு பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் 1/2 கிலோ
  2. சீரக சம்பா அரிசி 2 கப்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. தயிர் 1/4 கப்
  6. இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. புதினா சிறிது
  10. கறிமசால் தூள் 2 ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  12. பிரியாணி தூள் 3 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. கடுகு 1 ஸ்பூன்
  16. ஷாஜீரா 1 ஸ்பூன்
  17. பட்டை 2
  18. கிராம்பு 2
  19. ஏலக்காய் 2
  20. பிரியாணி இலை 2
  21. நெய் 4 டேபிள்ஸ்பூன்
  22. எண்ணெய் 8 டேபிள்ஸ்பூன்
  23. தேங்காய் பால் 2 கப்
  24. தண்ணீர் 1_1/2 கப்

வழிமுறைகள்

  1. சுத்தம் செய்த மட்டன் உடன் தயிர் இஞ்சி பூண்டு விழுது பொடியாக நறுக்கிய தக்காளி சிறிது உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து சுமார் ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சிறிது விட்டு சூடானதும் கடுகு ஷாஜீரா பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வெடிக்க விட்டு
  3. நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் புதினா சேர்த்து வதக்கவும்
  4. பின் ஊறவைத்த மட்டனை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்
  5. மட்டன் நன்கு வெந்ததும் இறக்கவும்
  6. அரிசியை 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும் பின் அலசி வடிகட்டி வைக்கவும்
  7. வாணலியில் நெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
  8. பின் அரிசியை சேர்த்து வதக்கவும்
  9. பின் தேங்காய் பால் மற்றும் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்
  10. அரிசி முக்கால் பாகம் வெந்ததும் இறக்கவும்
  11. பின் நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் முதலில் பாதி சாதம் பின் மட்டன் கிரேவி முழுவதும் பின் மீண்டும் சாதம் அதன் மேல் மீதி நெய் முழுவதும் ஊற்றி விடவும்
  12. பின் மேல் புதினா கொத்தமல்லி தழை தூவி அலுமினிய பாயில் கொண்டு மூடி அவனில் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
  13. பின் எடுத்து நன்கு கிளறி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்