வீடு / சமையல் குறிப்பு / நண்டு மிளகு வறுவல்

Photo of Crab pepper fry by Subha Shivaguru at BetterButter
80
1
0.0(0)
0

நண்டு மிளகு வறுவல்

Jan-29-2019
Subha Shivaguru
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நண்டு மிளகு வறுவல் செய்முறை பற்றி

Crab pepper fry is the famous dish from our south tamilnadu

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • தீபாவளி
 • தமிழ்நாடு
 • ரோசஸ்டிங்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. வறுத்து அரைக்க :
 2. சோம்பு ~ 1/2 மேஜை கரண்டி
 3. மிளகாய் வற்றல் ~ 6
 4. சீரகம் 1/2 மேஜை கரண்டி
 5. மிளகு 1/4 தேக்கரண்டி
 6. மல்லி ~ 1 மேஜை கரண்டி
 7. கசகசா ~1/4 மேஜை கரண்டி
 8. முந்திரி பருப்பு ~5
 9. தேங்காய் 1/2 மூடி துருவியது
 10. தாளிக்க
 11. சின்ன வெங்காயம் ~10
 12. இஞ்சி பூண்டு பேஸ்ட்~1 மேஜை கரண்டி
 13. எண்ணெய் ~ தேவையான அளவு
 14. மிளகாய் ~1
 15. தக்காளி ~ 1
 16. ஏலக்காய் பட்டை கிராம்பு ~ தலா 1 வாசனைக்கு
 17. நண்டு ~ 4
 18. உப்பு ~ தேவையான அளவு
 19. மிளகு தூள் ~ 1 மேஜை கரண்டி
 20. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை~ சிறிதளவு

வழிமுறைகள்

 1. வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வதக்கி மையாக அரைக்கவும்
 2. நண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி தேவைக்கேற்ப உடைத்து எடுத்துக் கொள்ளவும்
 3. அடி கனமான பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து அவை வதங்கிய பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும்
 4. வெங்காயம் சிறிதளவு வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்
 5. அதில் நறுக்கி வைத்துள்ள மிளகாய் தக்காளியை சேர்த்து வதங்கியபின் நண்டுகளை அதில் சேர்க்கவும்
 6. பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக நன்கு கலந்து வதக்கவும்
 7. நண்டு வேகும் அளவிற்கு தக்க சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி நண்டினை நன்கு வேகவிடவும்
 8. பின் நண்டு நன்றாக வெந்து உள்ளதா என்று பார்க்க வேண்டும்
 9. நன்றாக வெந்து அதிலுள்ள நீர் வெளியே வரும்..குழம்பில் உள்ள நீர் சுருளும் வரை நன்கு வதக்கவும்
 10. ஒரு கெட்டியான கிரேவி பதத்திற்கு வரும் பொழுது மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
 11. பின் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை தூவி பரிமாறவும்
 12. காரசாரமான நண்டு மசாலா வறுவல் தயார்
 13. நான் நண்டினை முழுசாக லேசாக சுத்தி வைத்து தட்டி சேர்த்துள்ளேன்...உங்களுக்கு பிடித்தவாறு உடைத்து சமைக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்