வீடு / சமையல் குறிப்பு / பூண்டு சாஸில் காரமான காய்கறி

Photo of Veg balls in hot garlic sauce by Sarojam Arumugam at BetterButter
520
0
0.0(0)
0

பூண்டு சாஸில் காரமான காய்கறி

Jan-29-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டு சாஸில் காரமான காய்கறி செய்முறை பற்றி

சப்பாத்தியுடன் நான் உடன் சேர்த்து சாப்பிடும் சுவையான காரசாரமான சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொடியாக துருவிய கேரட் ஒன்று
  2. பொடியாக நறுக்கிய பீன்ஸ் 5
  3. பொடியாக துருவிய காலிபிளவர் 2 பூ
  4. பொடியாக துருவிய பூண்டு 10
  5. பொடியாக துருவிய இஞ்சி ஒரு தேக்கரண்டி
  6. பொடியாக நறுக்கிய செலரி 2 மேசைக்கரண்டி
  7. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
  8. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
  9. சோள மாவு-4 மேசைக்கரண்டி
  10. மிளகு பொடி ஒரு தேக்கரண்டி
  11. செஷ்வான் சாஸ் இரண்டு மேசை கரண்டி
  12. சோயா சாஸ் ஒரு தேக்கரண்டி
  13. வினாகிரி ஒரு தேக்கரண்டி
  14. என்ன பொரிப்பதற்கு
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அனைத்து காய்கறிகளும் மூன்று நிமிடம் வதக்க வேண்டும்
  2. இத்துடன் மிளகு தூள் சோள மாவு கலந்து அடுப்பை அணைக்கவும்
  3. சூடு தாங்கும் பதத்தில் கலவையின் சிறிய உருண்டை பண்ணவும்
  4. 10 நிமிடம் வைத்து அப்புறம் இந்த உருண்டைகளை பொரித்தெடுக்கவும்
  5. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் பொடியாக அரிந்தது சேர்த்து வதக்கவும்
  6. மூன்று நிமிடத்துக்கு பின் அத்துடன் சாசுகளை சேர்த்து விநாகிரி சேர்த்து நன்றாக கிளறவும்
  7. அதில் ஒரு மேசைக் கரண்டி சோளமாவை சேர்த்து கிளறவும்
  8. அத்துடன் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி கொதிக்க வைக்கவும்
  9. தேவையான உப்பு சேர்த்து கொதித்ததும் வறுத்த உருண்டைகளை போட்டு நன்றாக கிளறி சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்