வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் டிக்கா சேஷ்வான் ப்ரைடு ரைஸ்

Photo of Paneer tikka schezwan fried rice by Sarojam Arumugam at BetterButter
455
0
0.0(0)
0

பன்னீர் டிக்கா சேஷ்வான் ப்ரைடு ரைஸ்

Jan-29-2019
Sarojam Arumugam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் டிக்கா சேஷ்வான் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகப்பிடித்தமான காரசாரமான ப்ரைட் ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் டிக்கா வுக்கு தேவையான பொருள்கள்
  2. பன்னீர் 100 கிராம்
  3. மைதா ஒரு மேசைக்கரண்டி
  4. மல்லி பொடி ஒரு தேக்கரண்டி
  5. மிளகாய்த் தூள் அரை தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. இஞ்சி பூண்டு விழுது கால் தேக்கரண்டி
  9. சாதத்திற்கு தேவையான பொருள்கள்
  10. உதிரியாகவேகவைத்த பாசுமதி அரிசி ஒரு கப்
  11. நெய் 2 மேசைக்கரண்டி
  12. பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப்
  13. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  14. துருவிய கேரட் கால் கப்
  15. பொடியாக நறுக்கிய கேப்ஸிகம் கால் கப்
  16. ஸ்பிரிங் ஆனியன் கால் கப்
  17. செஷ்வான் சாஸ் ஒரு மேசைக்கரண்டி
  18. சில்லி சாஸ் ஒரு தேக்கரண்டி
  19. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பன்னீர் டிக்கா செய்யும் பொருட்கள் அனைத்தையும் கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்
  2. ஒரு தவாவில் லேசாக எண்ணெய் போட்டு பனீரை சுட்டெடுக்கவும்
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுதை வதக்கவும்
  4. அத்துடன் அனைத்து காய்கறிகளும் சேர்த்து வதக்கவும்
  5. வதங்கினதும் அதை ஸ்டேஷன் சாங்ஸ் சில்லி சாஸ் ஊற்றி நன்றாக கிளறவும்
  6. தேவையான உப்பு சேர்க்கவும்
  7. அத்துடன் சுட்ட பன்னீரை சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்