வீடு / சமையல் குறிப்பு / அவர புடலங்காய் பொரியல்

Photo of Awara snake gourd poriyal by sudha rani at BetterButter
730
0
0.0(0)
0

அவர புடலங்காய் பொரியல்

Jan-29-2019
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவர புடலங்காய் பொரியல் செய்முறை பற்றி

ப்ரஷ்ஷான அவர பருப்பு வைத்து சுவையான ஆரோக்கியமான பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவர பருப்பு 1 கப்
  2. புடலங்காய் 1/4 கிலோ
  3. வெங்காயம் 3
  4. தக்காளி 4
  5. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  6. சீரகத்தூள் 1 ஸ்பூன்
  7. சாம்பார் பொடி 3 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் 2
  11. கறிவேப்பிலை சிறிது
  12. கொத்தமல்லி தழை சிறிது
  13. தேங்காய் துருவல் 1 கப்
  14. எண்ணெய் தேவையான அளவு
  15. கடுகு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முற்றிய அவரையில் இருந்து விதை மற்றும் எடுத்து வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி மற்றும் உப்பு தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
  5. பின் அவர பருப்பு மற்றும் (தோல் சீவி நறுக்கி உள்ள இருக்கும் விதை நீக்கி) பொடியாக நறுக்கிய புடலங்காய் சேர்த்து வதக்கவும்
  6. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
  7. பின் தண்ணீர் சுண்டியதும் தேங்காய் துருவல் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்