வீடு / சமையல் குறிப்பு / " சிக்கன் அச்சார் "

Photo of " Chicken pickle " by Navas Banu L at BetterButter
226
0
0.0(0)
0

" சிக்கன் அச்சார் "

Jan-29-2019
Navas Banu L
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

" சிக்கன் அச்சார் " செய்முறை பற்றி

" சிக்கன் அச்சார் " தேவையான பொருட்கள் முள்ளில்லாத கோழி இறைச்சி - 500 கிராம் மிளகுப் பொடி - 2 1/2 டேபிள் ஸ்பூண் மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண் பெப்பர் பொடி - 1 டீஸ்பூண் இஞ்சி பூண்டு விழுது - 5 டேபிள் ஸ்பூண் கறிவேப்பிலை - 2 தண்டு வற்றல் மிளகு - 3 பச்சை மிளகு - 4 தேங்காய் எண்ணை - 3/4 கப் உப்பு தேவைக்கு வினாகிரி - 1/2 கப் வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூண் காயப்பொடி - 1/2 டீஸ்பூண் கடுகு - 1/2 டீஸ்பூண் செய்முறை 1.கோழியை சிறிது வினாகிரி சேர்த்து சுத்தமாக கழுவி வைக்கவும். 2.ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 1/2 டேபிள் ஸ்பூண் மிளகு பொடி, 1/4 டீஸ்பூண் மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூண் பெப்பர் பொடி,இஞ்சி பூண்டு விழுது 1 1/2 டேபிள் ஸ்பூண், தேவைக்கு உப்பும், சிறிது தண்ணீர் தெளித்து பேஸ்ட் பருவத்தில் ஆக்கி அதில் கோழியை நன்றாக மிக்ஸ் பண்ணி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். 3.ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணை ஊற்றி மீடியம் தீயில் கோழியை டீப் ஃப்ரை செய்து எடுக்கவும். 4.கோழி பொரித்த எண்ணையை ஒரு அரிப்பில் அரித்து எடுக்கவும். 5.சிறிய சீனச்சட்டி அடுப்பில் வைத்து கோழி பொரித்த எண்ணையை ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வற்றல் மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும். பச்சை மிளகு நறுக்கி சேர்க்கவும். எல்லாம் நன்றாக பொரிந்து வரும் போது தீயைக் குறைக்கவும். அதில் மீதி இருக்கக்கூடிய மஞ்சள், மிளகு, பெப்பர் பொடிகளைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். 6.காயப்பொடி, வெந்தயப் பொடி சேர்க்கவும். 7.வினாகிரி சேர்க்கவும். 8.எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணவும். 9.நன்றாகக் கொதித்து மஸாலா இறுகி வரும் போது பொரித்த கோழியை அதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். உப்பு குறைவு என்றால் சேர்த்துக் கொள்ளவும்.

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முள்ளில்லாத கோழி இறைச்சி - 500 கிராம்
  2. மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண்
  3. மிளகு பொடி - 3 டேபிள் ஸ்பூண்
  4. பெப்பர் பொடி - 1 டீஸ்பூண்
  5. இஞ்சி பூண்டு விழுது - 5 டேபிள் ஸ்பூண்
  6. கறிவேப்பிலை - 2 தண்டு
  7. வற்றல் மிளகு - 3
  8. பச்சை மிளகு - 4
  9. தேங்காய் எண்ணை - 3/4 கப்
  10. வினாகிரி - 1/2 கப்
  11. வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூண்
  12. காயப்பொடி - 1/2 டீஸ்பூண்
  13. கடுகு - 1/2 - டீஸ்பூண்
  14. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. 1.கோழியை சிறிது வினாகிரி சேர்த்து சுத்தமாக கழுவி வைக்கவும்.
  2. 2.ஒரு பாத்திரம் எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூண் மிளகு பொடி,1/4 டீஸ்பூண் மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூண் பெப்பர் பொடி, 1 1/2 டேபிள் ஸ்பூண் இஞ்சி பூண்டு விழுது, தேவைக்கு உப்பும், சிறிது தண்ணீரும் தெளித்து பேஸ்ட் பருவத்தில் ஆக்கி அதில் கோழியைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  3. 3.ஒரு மணி நேரம் கழிந்து ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து கோழி பொரிப்பதற்க்கு தேவையான எண்ணை ஊற்றி மீடியம் தீயில் கோழியை டீப் ஃப்ரை செய்து எடுக்கவும்.
  4. 4.கோழி பொரித்த எண்ணையை ஒரு அரிப்பில் அரித்துக் கொள்ளவும்.
  5. 5.ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் கோழி பொரித்த எண்ணையை ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வற்றல் மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை மிளகு நறுக்கிச் சேர்க்கவும்.எல்லாம் நன்றாக வதங்கி பொரிந்து வரும் போது தீயை குறைக்கவும்.
  6. 6.தீயைக் குறைத்து விட்டு அதில் மீதி இருக்கும் மஞ்சள், மிளகு, பெப்பர் பொடிகளைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
  7. 7. காயப்பொடி, வெந்தயப்பொடி, வினாகிரிச் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி கொதிக்க விடவும். நன்றாக கொதித்து தண்ணீர் வற்றி மஸாலா இறுகி வரும் போது பொரித்த கோழியை அதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.உப்பு தேவை என்றால் சேர்த்துக் கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்