வீடு / சமையல் குறிப்பு / மண் பானை மட்டன் கிரேவி

Photo of Mutton grevi by sudha rani at BetterButter
231
0
0.0(0)
0

மண் பானை மட்டன் கிரேவி

Jan-29-2019
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மண் பானை மட்டன் கிரேவி செய்முறை பற்றி

மட்டன் குழம்பை மண் பானையில் செய்யும் போது அதனுடைய ருசி தனி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. மட்டன் 1 கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 4
  4. பச்சை மிளகாய் 2
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. கடுகு 1 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
  10. மசாலா அரைக்க:
  11. சின்ன வெங்காயம் 1 கப்
  12. தேங்காய் துருவல் 1/2 கப்
  13. கொத்தமல்லி விதை 1/2 கப்
  14. வரமிளகாய் 14
  15. சீரகம் 2 ஸ்பூன்
  16. மிளகு 1 ஸ்பூன்
  17. வெந்தயம் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மட்டன் ஐ நறுக்கி அலசி வைக்கவும்
  2. மண் பானையில் முதலில் மட்டனையும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்
  3. பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. நன்கு சுருள வதக்கி வெந்த மட்டனில் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  5. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
  6. வெந்த மட்டன் உடன் அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  7. நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்