வீடு / சமையல் குறிப்பு / " சாளை மீன் மிளகு கறி "

Photo of " Chalai meen milagu curry " by Navas Banu L at BetterButter
64
1
0.0(0)
0

" சாளை மீன் மிளகு கறி "

Jan-29-2019
Navas Banu L
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

" சாளை மீன் மிளகு கறி " செய்முறை பற்றி

" சாளைமீன் மிளகு கறி" தேவையான பொருட்கள் சாளைமீன் -10 குடம் புளி - 3 பெரிய வெங்காயம் - 1 தக்காளி -2 பச்சை மிளகு - 2 கறிவேப்பிலை - 2 தண்டு மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண் மிளகு பொடி - 2 டேபிள் ஸ்பூண் மல்லி பொடி - 3 டேபிள் ஸ்பூண் பெருஞ்சீரக பொடி - 1 டேபிள் ஸ்பூண் பெப்பர் பொடி - 1டீ ஸ்பூண் உப்பு தேவைக்கு தாளிக்க எண்ணை கடுகு - 1 டீ ஸ்பூண் வெந்தயம் - 1 டீ ஸ்பூண் செய்முறை 1. மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். 2.குடம் புளியை அரை கப் தண்ணீரில் ஊற போடவும். 3.வெங்காயம், தக்காளி, பச்சை மிளகை நறுக்கிக் கொள்ளவும். 4.மிக்ஸியின் சிறிய ஜார் எடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகு, மஞ்சள்,மிளகு, மல்லி,பெப்பர், பெருஞ்சீரகப் பொடிகளையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பேஸ்ட் பருவத்தில் அரைத்துக் கொள்ளவும். 5.அரைத்த மஸாலாவுடன் ஒன்றரை கப் தண்ணீரும் ,தேவைக்கு உப்பும் சேர்த்து கலக்கி வைக்கவும். 6.மண் சட்டி அடுப்பில் வைத்து எண்ணை விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் இட்டு தாளிக்கவும். வெந்தயம் சிவந்து வரும்போது கறி வேப்பிலை சேர்க்கவும். கலக்கி வைத்திருக்கும் மஸாலாவை அதில் சேர்க்கவும். ஊற வைத்திருக்கும் குடம் புளியை அந்த தண்ணீருடன் மஸாலாவுடன் சேர்த்து சட்டியை மூடி வைத்து மஸாலாவை நன்றாகக் கொதிக்க விடவும். கொதித்த உடன் மீனை மஸாலாவில் சேர்க்கவும். கறியில் கரண்டி போடக்கூடாது.போட்டால் மீன் பொடிந்து விடும்.இரண்டு கையால் சட்டியைப் பிடித்து கறக்கிக் கொடுக்கவும். 7.தண்ணீர் வற்றி மஸாலா நன்றாக இறுகி எண்ணை தெளிந்து வரும் போது இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • கேரளா
 • பாய்ளிங்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. சாளைமீன் - 10
 2. குடம் புளி - 3
 3. பெரிய வெங்காயம் - 1
 4. தக்காளி - 2
 5. பச்சை மிளகு - 2
 6. கறிவேப்பிலை - 2 தண்டு
 7. மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண்
 8. மிளகு பொடி - 2 டேபிள் ஸ்பூண்
 9. மல்லிப் பொடி - 3 டேபிள் ஸ்பூண்
 10. பெருஞ்சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூண்
 11. பெப்பர் பொடி - 1/2 டேபிள் ஸ்பூண்
 12. உப்பு தேவைக்கு
 13. தாளிக்க எண்ணை
 14. கடுகு - 1 டீஸ்பூண்
 15. வெந்தயம் - 1 டீஸ்பூண்

வழிமுறைகள்

 1. 1.மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
 2. 2.குடம் புளியை அரை கப் தண்ணீரில் ஊற விடவும்.
 3. 3.வெங்காயம், தக்காளி, பச்சை மிளகை நறுக்கிக் கொள்ளவும்.
 4. 4.மிக்ஸியின் சிறிய ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகு, மஞ்சள், மிளகு, மல்லி, பெப்பர், பெருஞ்சீரகப் பொடிகளையும் சேர்த்து நன்றாக. பேஸ்ட் பருவத்தில் அரைத்துக் கொள்ளவும்.
 5. 5.அரைத்த மஸாலாவுடன் ஒன்றரை கப் தண்ணீரும், தேவைக்கு உப்பும் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
 6. 6.மண் சட்டி அடுப்பில் வைத்து எண்ணை விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் இட்டு, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
 7. 7.வெந்தயம் சிவந்து வரும் போது கலக்கி வைத்திருக்கும் மஸாலாவைச் சேர்க்கவும். ஊற வைத்த குடம் புளியை அந்த தண்ணீரோடு மஸாலாவில் சேர்த்து சட்டியை மூடி வைத்து நன்றாகக் கொதிக்க விடவும்.
 8. 8.கொதித்த உடன் மீனை மஸாலாவில் சேர்க்கவும்.
 9. 9.கறியில் கரண்டி போடக்கூடாது. போட்டால் மீன் பொடிந்து விடும். அதனால் இரண்டு கைகளால் சட்டியைப் பிடித்து கறக்கிக் கொடுக்கவும்.
 10. 10.தண்ணீர் வற்றி மஸாலா நன்றாக இறுகி எண்ணை மேலே தெளிந்து வரும் போது இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்