வீடு / சமையல் குறிப்பு / மாவத்தல் சாம்பார்

Photo of Dried Mango Sambar by Sowmya Sundar at BetterButter
394
0
0.0(0)
0

மாவத்தல் சாம்பார்

Jan-29-2019
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாவத்தல் சாம்பார் செய்முறை பற்றி

காய்ந்த மாங்காய் வற்றல், புளி,தக்காளி என மூன்று வகையான புளிப்பு சுவை மற்றும் காரம் நிறைந்த பாரம்பரிய குழம்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காய்ந்த மாங்காய் வற்றல் 10
  2. புளி சிறு நெல்லிக்காய் அளவு
  3. தக்காளி 2
  4. சின்ன வெங்காயம் 10
  5. பச்சை மிளகாய் 2
  6. கறிவேப்பிலை மல்லி சிறிது
  7. துவரம் பருப்பு 1/2 கப்
  8. மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்+ 1/4 டீஸ்பூன்
  9. நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
  10. கடுகு 1 டீஸ்பூன்
  11. வெந்தயம் 1/4 டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. வறுத்து அரைக்க:
  14. கடலைப் பருப்பு , கொத்தமல்லி விதை தலா ஒரு டேபிள்ஸ்பூன்
  15. மிளகாய் வற்றல் 8
  16. தேங்காய்த் துருவல் கால் கப்

வழிமுறைகள்

  1. மாங்காய் கிடைக்கும் சமயங்களில் மாங்காயை நறுக்கி உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இதுவே மாவத்தல் ஆகும். தேவையான போது உபயோகித்து கொள்ளவும்
  2. மா வத்தலை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும்
  3. துவரம் பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சொட்டு நல்லெண்ணெய் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு , கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  5. அதை தேங்காய் துருவல் , தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  6. கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி ,மாவற்றல் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
  7. பின் அதில் புளிக் கரைசல் சேர்த்து பத்து நிமிடம் வரை நன்கு வேக வைக்கவும்
  8. பின் அரைத்த விழுது மற்றும் துவரம் பருப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்
  9. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்