வீடு / சமையல் குறிப்பு / வஞ்சிர மீன் தொக்கு

Photo of King fish Semi-Gravy by Sumaiya shafi at BetterButter
795
0
0.0(0)
0

வஞ்சிர மீன் தொக்கு

Jan-29-2019
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வஞ்சிர மீன் தொக்கு செய்முறை பற்றி

வஞ்சிர மீன் தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வஞ்சிரம் மீன் அரை கிலோ
  2. வெங்காயம் 3 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  4. திக்கான புளி தண்ணீர் 1/4 கப்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. மல்லி இலை சிறிதளவு
  8. சீரகம் தாளிக்க
  9. கடுகு சிறிதளவு தாளிக்க
  10. கலர் பொடி அரை டீஸ்பூன் விருப்பப்பட்டால்
  11. எண்ணெய்
  12. சிவப்பு காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  13. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  14. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  15. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  16. பச்சைமிளகாய்-2
  17. லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
  18. சோள மாவு ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் மீனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி வைத்து கொள்ளவும்
  2. பின் சிவப்பு மிளகாய் தூள், சோள மாவு ,மல்லித்தூள், மஞ்சள் தூள்,உப்பு,லெமன் ஜூஸ்,சீரக தூள் மற்றும் கலர் பொடி எல்லாவற்றையும் சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  3. அரைமணி நேரம் ஊறவைத்து பின் பொரிக்கவும்
  4. பொரித்த மீனை முள்ளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக எடுத்து கொள்ளவும்
  5. பின் பொரித்த அதே தவாவில் கருவேப்பிலை, கடுகு,சீரகம், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. தக்காளி நன்கு மசிந்து வரும்போது உப்பு,புளி தண்ணீர் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்
  8. பின் பொரித்து வைத்த மீனை மற்றும் மல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்