வீடு / சமையல் குறிப்பு / வஞ்சிரம் மீன் ஊறுகாய்

Photo of King Fish Pickles by Sumaiya shafi at BetterButter
492
0
0.0(0)
0

வஞ்சிரம் மீன் ஊறுகாய்

Jan-29-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வஞ்சிரம் மீன் ஊறுகாய் செய்முறை பற்றி

வஞ்சிரம் மீன் ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வஞ்சிரம் மீன் கால் கிலோ சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  2. காய்ந்த மிளகாய் 10
  3. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  4. சிவப்பு மிளகாய் தூள் 5 டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் ஐந்து
  6. இஞ்சித் துண்டுகள் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. பூண்டு பல்லு பத்து
  8. வெந்தயத்தூள் 1 டீஸ்பூன்
  9. கடுகு ஒரு டேபிள்ஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் 1/2 டேபிள்ஸ்பூன்
  11. வினிகர் 100ml
  12. மிளகு ஒரு டீஸ்பூன்
  13. நல்லெண்ணெய்-50- 100 ml
  14. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் வஞ்சிரம் மீனை தோல் மற்றும் முள் இல்லாமல் சிறிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்
  2. பின் காய்ந்த மிளகாய் ,மஞ்சள் தூள்,மிளகு, உப்பு , கடுகு மற்றும் வினிகர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்
  3. அந்த மசாலா கலவை மீனில் சேர்த்து கிளறிக் வைத்து கொள்ளவும்
  4. அரைமணி நேரம் ஊறவைத்து பின் பொரித்து எடுக்கவும்
  5. தாளிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
  6. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து பூண்டு, இஞ்சி,கடுகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  7. லேசாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறவும்
  8. பின் பொரித்து வைத்த மீனை அதில் சேர்த்து சிறிது வினிகர் கலந்து கொதிக்கவிடவும்
  9. வற்றி வரும் போது ஆப் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்