வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சம்பழம் ஊறுகாய்

Photo of Dates Pickle by Menaga Sathia at BetterButter
1558
0
0.0(0)
0

பேரிச்சம்பழம் ஊறுகாய்

Jan-29-2019
Menaga Sathia
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சம்பழம் ஊறுகாய் செய்முறை பற்றி

இனிப்பு,புளிப்பு,காரம் என அனைத்தும் கலந்த சுவையில் இருக்கும் இந்த ஊறுகாய்.கைமணம் சமையல் நிகழ்ச்சியில் பார்த்து சிறுமாற்றங்களுடன் செய்த குறிப்பு இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேரிச்சம்பழம் -1/2 கப்,விதை நீக்கி,நீளவாக்கில் அரிந்தது
  2. கல் உப்பு -தேவைக்கு
  3. இஞ்சி -1 டீஸ்பூன்,பொடியாக நறுக்கியது
  4. பூண்டுப்பல் -5,பொடியாக நறுக்கியது
  5. கறிவேப்பிலை-1 ஈர்க்கு
  6. எண்ணெய் -1/4 கப்
  7. கடுகு -1/4 டீஸ்பூன்
  8. கட்டி பெருங்காயம்- சிறு துண்டு
  9. காஷ்மீரி மிளகாய்தூள் -2 டீஸ்பூன்
  10. காய்ந்த மிளகாய்-5
  11. புளி -நெல்லிக்காயளவு
  12. துருவிய வெல்லம்-1 டேபிள்ஸ்பூன்
  13. கசகசா -1 டீஸ்பூன்
  14. வினிகர் -1/3 கப்
  15. திராட்சை -2 டீஸ்பூன்
  16. ஜாதிக்காய் பொடி -1/8 டீஸ்பூன்
  17. வறுத்த வெந்தயபொடி -1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காய்ந்த மிளகாயை 1/4 கப் வினிகரில் ஊறவைக்கவும்.
  2. மிக்ஸியில் புளி,கசகசா,வெல்லம்,திராட்சை இவற்றை நீர் விடாமல் அரைக்கவும்.
  3. அதனுடன் ஊறவைத்த மிளகாயை வினிகர்,காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மீதமுள்ள வினிகருடன் சேர்த்து மைய அரைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  5. பின் அரைத்த விழுது,பேரிச்சம்பழம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. கடைசியாக உப்பு,ஜாதிக்காய் பொடி,வெந்தயபொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
  7. 10 நிமிடம் கழித்து சுவைத்தால் செம சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்