வீடு / சமையல் குறிப்பு / தலைக்கறி சுக்கா

Photo of Thalaikari sukka by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
338
1
0.0(0)
0

தலைக்கறி சுக்கா

Jan-29-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தலைக்கறி சுக்கா செய்முறை பற்றி

கிராமத்து சமையல் விருந்தென்றால் முழுஆடு வெட்டி கறியெல்லாம் முதல்நாள் தீர்ந்துவிடும் மறுநாள் தலை குடல் சமையல் இரவே தலையை வாட்டி சுத்தம்செய்து முழுதாக வேகவைத்துவிடுவர் காலையில் எடுத்து கறிதனியாக எலும்பு தனியாக வந்துவிடும் அந்தகாலம் மறக்கமுடியாது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஆட்டுதலை 1
  2. சின்ன வெங்காயம் 1/4கி
  3. தக்காளி 4
  4. பூண்டு 50கிராம்
  5. காய்ந்தமிளகாய் 10
  6. கருவேப்பிலை
  7. சோம்பு தூள் 2ஸ்பூன்
  8. சீரகதூள் 1ஸ்பூன்
  9. மிளகாய் தூள்1ஸ்பூன்
  10. மிளகு தூள் 1ஸ்பூன்
  11. உப்பு
  12. நல்லெண்ணைய்
  13. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2ஸ்பூன்
  14. கரம்மசால் தூள்1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கறிக்கடையில் தலையை வாட்டி வெட்டி வாங்கவும்
  2. அதை கழுவி மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு தண்ணீர் விட்டு குக்கரில் 6 விசில் விட்டு வைக்கவும்
  3. வெங்காயம் பூண்டை நறுக்கி தக்காளியை வெட்டிவைக்கவும்
  4. குக்கரில் வேகவைத்தை கறி தனியாக எலும்பு தனியாக. பிரித்து எடுத்து வைக்கவும்
  5. மற்றொரு சட்டியில் நல்லெண்ணைவிட்டு கரம்மசால் போட்டு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை வெங்காயம் பூண்டு தக்காளி வரிசையாக போட்டு வதக்கவும்
  6. வதங்கியதும் தனியாக எடுத்த தலைக்கறியை சேர்க்கவும் அதில் சோம்பு சீரகம் மிளகு மிளகாய் மல்லி தூள் உப்பு சேர்த்து வேகவைத்த கறிதண்ணியை விட்டு குறைந்த தீயில் 10 நிமிசம் வேகவிட்டு இறக்கவும்
  7. காரசார மதுரை கிராமத்து தலைக்கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்